fbpx

முகப்பரு நீங்கி முகம் பளபளன்னு மாற இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க..!! உங்களுக்கே மாற்றம் தெரியும்..!!

தற்போதைய இளைஞர்கள், இளம்பெண்களிடம் காணப்படும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று முகப்பரு மற்றும் முடி உதிர்வு. மன அழுத்தம், சரியான ஓய்வு இன்மை, உடல் சூடு, காலநிலை மாற்றம், வெயில், சத்துக்குறைவு என இதற்கு மருத்துவ ரீதியாக பல காரணங்கள் இருக்கின்றன. ஒரு பாதிப்பு வந்த பின்னர் அதை எப்படி சரிசெய்வது என யோசிப்பதை விட அதை வராமல் தடுப்பது எப்படி என்பதை தான் நாம் பார்க்க வேண்டும். அந்தவகையில், முகத்தில் தோன்றும் பருக்களை வராமல் தடுக்கும் ஒரு சில வழிகள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சருமத்தில் தேங்கியுள்ள அழுக்கு காரணமாகவே அதிகளவில் முகப்பருக்கள் உண்டாவதாக ஆய்வுகள் சொல்கின்றன. எனவே, முகத்தை தினமும் குறைந்தது 3 முறையாவது தண்ணீரில் சுத்தமாக கழுவுவது நல்லது. இதனால், புதிய பருக்கள் உருவாகும் பிரச்சனை வாரது. குளித்தப்பின்னர் சருத்ததை கரடுமுரடான துணியால் அழுத்தி துடைப்பது சரும எரிச்சல், தோல் சிவத்தல், வீக்கத்திற்கு வழிவகுக்கும். இவ்வாறு செய்வதால், முகத்தில் இருக்கும் பருக்கள் வெடித்து மற்ற பகுதிகளுக்கும் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, இனி அப்படி செய்ய வேண்டாம்.

தலைமுடிக்கு நாம் பயன்படுத்தும் எண்ணெய், ஜெல் போன்றவை சருமத்துடன் தொடர்புக்கொள்ளும் போது முகத்தில் பருக்கள் அதிகரிக்கிறது. எனவே, உங்கள் தலைமுடியை முடிந்தவரை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். சில சமயங்களில் பொடுகு, பேன் தொலையாலும் முகப்பரு உண்டாகலாம். முகத்தில் உள்ள பருக்களை கைகளால் கசக்கி காயப்படுத்துவதும் பருக்களின் பரவலுக்கு காரணமாகும். பருக்களை கசக்கும் போது சருமத்தின் மற்ற பகுதிக்கு பரவும் பாக்டீரியாக்கள், முகப்பரு பரவலுக்கு வழிவகுக்கிறது. அதிகப்படியான மன அழுத்தம் முகத்தில் பருக்களின் பரவலுக்கு வழிவகுக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. எனவே யோகா, தியானம், உடற்பயிற்சி போன்றவற்றை செய்து மன அழுத்தத்தை குறைக்க முயற்சி செய்யுங்கள்.

சருமத்தை பராமரிக்க நீங்கள் பயன்படுத்தும் பொருட்களில் எண்ணெய் மூலக்கூறுகளின் கலவை அளவு அதிகமாக உள்ளதா? என பார்த்து வாங்குவது அவசியம். காரணம், இந்த எண்ணெய் கலவைகள் முகப்பரு பரவலை அதிகரிக்கும். குளியலுக்கு நாம் பயன்படுத்தும் நாறு, பிரஸ் போன்றவை சுத்தமாக இருக்கிறதா? என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள். இந்த பொருட்கள் அசுத்தமாக இருக்கும் பட்சத்தில், அது பாக்டீரியா தொற்றுக்கு வழிவகுத்து பருக்களை அதிகரிக்கும். மாதவிடாய், கருதரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு சிலர் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சில ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதுண்டு. இந்த மாத்திரைகளின் அளவில் மாற்றம் செய்வதன் மூலம் முகப்பரு பரவலை நாம் தடுக்கலாம்.

Chella

Next Post

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு..!! இடி மின்னலுடன் மழை..!! வானிலை மையம் சொன்ன குட் நியூஸ்..!!

Wed Apr 26 , 2023
தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்து வருகிறது. இதனால், கோடை வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், இன்று தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக […]

You May Like