fbpx

வேர் முதல் உச்சி வரை..!! தண்ணீரை உள்வாங்கும் மரம்..!! அனைத்து இலைகளுக்கும் பகிர்ந்து கொடுப்பது எப்படி?

ஒரு மரம் அதன் உச்சித் தளிர் வரை வாடாமல் குளிர்ச்சியாக இருக்க முக்கிய காரணம் தண்ணீர் தான். ஆனால், அந்த தண்ணீரை மரம் எப்படி தனக்குள் உள்வாங்கி அனைத்து இலைகளுக்கும் அனுப்புகிறது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தண்ணீரின் குணம் என்பது முற்றிலும் வேறுபட்டது. அதனை நாம் சில செயல்முறைகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும். ஒரு வெள்ளை நிற மலரை இரவு முழுவதும் நீல நிற சாயம் கலந்த தண்ணீரில் வைத்தால் பூவின் நிறமும் நீலமாக மாறும். அதேபோல் எந்த பொருளை நாம் சாயம் கலந்த தண்ணீரில் வைத்தாலும் அது அந்த நிறத்திற்கு மாறிவிடும். மெல்லிய குழாய் கொண்ட நுண் புழைக் குழாய் மூலமாக மேற்கொண்ட செய்முறையில் குழாயை தண்ணீரில் வைத்த உடன் தண்ணீர் மேல் நோக்கி நகர்கிறது. இது capillary action என்று கூறப்படுகிறது. தண்ணீர் மற்றும் குழாய் இடையில் உள்ள பரஸ்பர ஈர்ப்பு தான் தண்ணீர் மேல் நோக்கி செல்வதற்கு காரணம் என்று கூறலாம். இதற்கு அதிசன் அதாவது ஒட்டுதல் என்று பெயர்.

வேர் முதல் உச்சி வரை..!! தண்ணீரை உள்வாங்கும் மரம்..!! அனைத்து இலைகளுக்கும் பகிர்ந்து கொடுப்பது எப்படி?

தண்ணீரின் மூலக்கூறுகள் இயற்கையில் துருவமானது. இதனால், அவை ஒன்றோடு ஒன்று ஈர்க்கப்படுகிறது. இவ்வாறாக ஈர்க்கப்பட்டு ஒன்றோடு ஒன்று மூலக்கூறுகள் ஒட்டிக்கொள்வது ஒத்திசைவு என்று கூறப்படுகிறது. ஒட்டுதல் மற்றும் இணைவு பண்பு காரணமாக தண்ணீர் நீண்ட வரிசையை உருவாக்கி மெல்லிய குழாயில் மேல்நோக்கி நகர்கிறது. இந்த மெல்லிய குழாய் அனைத்து மர, செடி, கொடிகளில் இருப்பதால் தான் தண்ணீரை உச்சி வரை கொண்டு சென்று அனைத்து கிளை மற்றும் இலைகளுக்கும் பகிர்ந்து அளிக்க முடிகிறது. ஒத்திசைவு மற்றும் ஒட்டுதல் பண்பினால் மட்டும் தண்ணீரை மரத்தின் உச்சி வரை கொண்டு சென்று விட முடியாது. மற்றொரு செயல்முறையாக ஒரு பாலித்தீன் பையை செடியின் இலைகளை சுற்றி கட்டி வைத்துவிட்டு காலையில் பிரித்துப் பார்த்தால் அதன் உள்ளே தண்ணீர் இருக்கும்.

இதற்கு காரணம் இலையின் பின்பகுதியில் இருக்கும் சிறிய துளை தான். இதனை ஸ்டொமேட்டா என்று கூறுவார்கள். இந்தத் துளையானது மூச்சு விடுவது போல் திறந்து திறந்து மூடும். இந்த ஸ்டொமேட்டா மூலமாக தண்ணீர் மேல் நோக்கி இழுக்கப்படுகிறது. இதற்கு ட்ரான்ஸ்பிரேஷன் அதாவது போக்கு என்று பெயர். இதன் அடிப்படையில் நுண்புழை செயல் மற்றும் போக்கு காரணமாக தண்ணீர் வேரின் ஆழத்தில் இருந்து உச்சிக்கு நகர்ந்து அனைத்து கிளை மற்றும் இலைகளுக்கு செல்கிறது.

Chella

Next Post

#திருச்சி: கோர்ட்டில் ஆஜராக வந்த ரவுடி வெட்டி கொலை..!

Tue Dec 13 , 2022
திருச்சி மாநகர பகுதியில் உள்ள மேலகல்கண்டார் கோட்டையில் இளவரசன்(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது புதுச்சேரியில் துணை சபாநாயகரை கொல்ல முயன்ற வழக்கு உள்பட கொலை மிரட்டல், கொலை முயற்சி, திருட்டு போன்ற பல வழக்குகள் குவிந்து இருக்கின்றன.  இன்றைய தினத்தில் ஒரு வழக்கிற்காக புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜராக இளவரசன் வந்துள்ளார். இதனிடையில் கோர்ட் அருகே வந்தபோது அங்கு வந்த சில நபர்கள் கொண்ட மர்ம கும்பல், இளசரசனை […]

You May Like