யுபிஐ செயலிகள் மூலம் நடைபெறும் பணப்பரிவர்த்தனைகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. குறிப்பாக, பெரும்பாலான மக்கள் கூகுள் பே, ஃபோன் பே போன்ற செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு ரூபாய், 10 ரூபாய் என சில்லறை காசை எவ்வளவு வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் அனுப்பலாம் என்ற முறை இருந்து வந்தது. இதனால், பலசரக்கு கடை முதல், டீ கடை வரையில் கூகுள் பே பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், யுபிஐ செயலிகள் மூலம் நடைபெறும் பணப்பரிவர்த்தனைகளுக்கு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அளவு நிர்ணயம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2024 டிசம்பர் 31ஆம் தேதி வரை எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 11.90 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.