fbpx

நாள்பட்ட புண்களை கூட விரைவில் ஆற வைக்கும் தாத்தா செடி..!! இதன் பூவை சாப்பிட்டால் இந்த பிரச்சனையே வராது..!!

மழைக் காலங்களில் அனைத்து சமவெளிப் பகுதிகளிலும் கிடைக்கும் ஒரு அற்புத மூலிகை தான் இந்த தாத்தா செடி. இதற்கு இன்னும் பல பெயர்கள் உண்டு. இந்த செடியின் மகத்துவம் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தச் செடியை பற்றிய மகத்துவத்தை தெரிந்து கொள்ளும் முன், இந்த செடியில் இருக்கும் காய்க்கு விஷத்தன்மை உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள். கட்டாயம் இந்தச் செடியில் இருக்கும் காயை சாப்பிட்டுவிடக் கூடாது. இந்த செடியானது மஞ்சள், வெள்ளை, ஊதா என 3 விதமான நிறங்களில் பூக்கும்.

இந்த பூவை 5, 6 பறித்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் பல் வலி சொத்தை, பல் பூச்சிகள் வெளியேறி விடும். இலையை அரைத்து பத்து போட்டால் ஆறாத சர்க்கரை புண் கூட சரியாகிவிடுமாம். இதன் இலைகளை பறித்து நன்றாக கழுவி, மிளகு ரசத்தில் போட்டு ஒரு கொதிவிட்டு, அந்த ரசத்தை குடித்தால் சளி பிரச்சனை, தலையில் நீர் கோர்த்தல், தலை பாரம் இப்படிப்பட்ட பல பிரச்சனைகளை தீர்வு காண்கிறது.

மேலும், நம்முடைய உடலில் ஏதேனும் வெட்டு காயம் பட்டு ரத்தம் நிற்காமல் வந்துகொண்டே இருக்கும். அந்த சமயத்தில், இந்த செடியின் இலையை பறித்து உள்ளங்கைகளை வைத்து கசக்கினால் சாறு வரும். அந்த சாறை காயத்தின் மீது போட்டால் ரத்தம் உடனடியாக நின்றுவிடும். நீண்ட நாட்களாக உடலில் ஆறாத புண் ஏதும் இருந்தால், அதன் மீது இந்த இலையை சிறிது தண்ணீர் விட்டு அறைத்து, அந்த விழுதை பூசி வந்தால் விரைவில் புண் ஆறிவிடும்.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் காயம் சீக்கிரமாக ஆறாது. அப்படிப்பட்டவர்கள் உடம்பில் ஏற்படும் காயத்தை கூட சரி செய்யும் அளவிற்கு இந்த செடி மருத்துவ குணம் கொண்டுள்ளது. இதேபோல் உடம்பில் ஏற்படும் தோல் பிரச்சனையான தேமல், சொறி இவைகள் சரியாக இந்த செடியின் இலையின் சாரை கசக்கி தடவி வந்தாலே போதும். இரண்டே நாட்களில் மறையும்.

இந்த செடியில் இருக்கும் பூ, வேர், இலை இவற்றையெல்லாம் ஒன்றாக சேகரித்து, ஒரு கடாயில் போட்டு ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி லேசாக வதக்கி, அந்த விழுதை முட்டியின் மீது வைத்து வெள்ளைத் துணி போட்டு கட்டி விட்டால் கை, கால் மூட்டு வலிகள் சரியாகிவிடும். நம் கண்களுக்கு தெரியாமல் எத்தனையோ விஷயங்கள், இன்னும் மறைந்து கிடக்கின்றன. மறைந்த முன்னோர்களுடன் சேர்த்து, இப்படியான அற்புதமான மருத்துவ குறிப்புகளும் மறந்தே போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

Read More : உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா..? அதிருப்தியில் மூத்த அமைச்சர்கள்..? சமாதானம் செய்யும் தலைமை..!! திமுகவில் சலசலப்பு..!!

English Summary

This grandfather is a wonderful herb that is available in all plains during the rainy season

Chella

Next Post

ரூ.5 லட்சம் வரை இலவசம்..!! யாருக்கெல்லாம் தெரியுமா..? விண்ணப்பிப்பது எப்படி..?

Sun Sep 22 , 2024
Each family members can get medical treatment up to Rs.

You May Like