fbpx

’வளர்ந்து வரும் சிவலிங்கம்’..!! ’உச்சத்தை தொட்டால் உலகம் அழியும்’..!! மர்மம் நிறைந்த குகை கோயில்..!!

தமிழ்நாட்டில் இருக்கும் குணா குகை, பல்லவன் குகைகள் போன்றவை பண்டைய கால பாரம்பரியம் மற்றும் கலாச்சாரங்களுக்கு சிறந்த எடுத்துக் காட்டுகளாக இருக்கின்றன. அதே சமயம், இந்த இடங்கள் மக்கள் பொழுதுபோக்கக் கூடிய சுற்றுலாத் தளமாகவும் விளங்குகிறது. இது போன்ற குகைகள் இந்தியா முழுவதிலும் உள்ளது. அவற்றில் மிகவும் பிரபலமானது தான் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பாதல் புவனேஷ்வர் குகைக் கோயில்.

பல்வேறு அதிசயங்கள் நிறைந்த இந்த குகையில் பண்டைய காலத்து புராணங்களின் குறிப்புடன் ஒரு ரகசியமும் பாதுகாக்கப்பட்டு வருகிறதாம். அதாவது, பாதல் புவனேஷ்வர் குகைக் கோவிலின் கருவறையில் உலகம் அழியும் ரகசியம் மறைந்திருப்பதாக நம்பப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 90 அடிக்கு கீழே அமைந்துள்ள இந்த கோவில், அயோத்தியை ஆண்ட சூரிய வம்சத்தின் மன்னன் ரிதுபர்ணனால் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ரிதுபர்ணன் பாம்புகளின் அரசனான ஆதிசேஷனை இந்த இடத்தில் தான் சந்தித்ததாக நம்பிக்கை இருக்கிறது. துவாபர் யுகத்தில் பாண்டவர்கள் இந்த குகையை மீண்டும் கண்டுபிடித்ததாகவும், அவர்கள் இந்த இடத்தில் வழிபாடுகளை மேற்கொண்டதாகவும் நம்பப்படுகிறது. புவனேஷ்வரில் வசிக்கும் சிவபெருமானை தரிசிக்க மற்ற அனைத்து கடவுள்களும், தெய்வங்களும் இந்த இடத்திற்கு வந்து செல்வதாக புராணங்கள் கூறுகின்றன.

மேலும், கலியுகத்தில் ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியார் செம்பு சிவலிங்கத்தை நிறுவிய போது இந்த குகையை கண்டுபிடித்ததாக சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் ரணத்வார், பாப்த்வார், தர்மத்வார் மற்றும் மோக்ஷத்வார் என 4 வாயில்கள் உள்ளன. மன்னன் ராவணன் கொல்லப்பட்டபோது ​​பாப்த்வார் வாயிலும், மகாபாரதப் போருக்குப் பிறகு ரணத்வார் வாயிலும் மூடப்பட்டதாக கூறப்படுகிறது.

இங்கு விநாயகப் பெருமானின் துண்டிக்கப்பட்ட தலை இருக்கிறதாம். முக்கியமாக, பாதல் குகையில் சிவலிங்கம் ஒன்று வளர்ந்து வருவதாகவும், அந்த லிங்கம் வளர்ந்து குகையின் உச்சத்தை தொடுகையில் உலகம் அழிந்து விடும் என்றும் ஒரு நம்பிக்கை இருக்கிறது..!

Chella

Next Post

கல்லீரல் புற்றுநோய்!… கண்டுபிடிப்பது கடினம்!… கொடிய நோயின் ஆரம்ப அறிகுறிகள் இதுதான்!

Tue Sep 5 , 2023
கல்லீரல் புற்றுநோய் என்பது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு கொடிய நோயாகும். Cancer.org இன் படி, ஒவ்வொரு ஆண்டும் 800,000 க்கும் அதிகமான மக்கள் கல்லீரல் புற்றுநோயால் கண்டறியப்படுகிறார்கள். இந்த வகை புற்றுநோயானது புற்றுநோய் இறப்புகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும், ஒவ்வொரு ஆண்டும் 700,000 க்கும் அதிகமான இறப்புகள் ஏற்படுகின்றன. கல்லீரல் புற்றுநோய் என்பது உங்கள் கல்லீரலின் செல்களில் உருவாகும் ஒரு வகை புற்றுநோயாகும். மயோ […]

You May Like