ஜிம்மில் வியர்க்க வியர்க்க மணிக்கணக்கில் ஒர்க் அவுட் செய்வதும், அதை வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பகிர்வதும் இன்றைய இளைஞர்களின் மோகமாக மாறிவிட்டது. அதுவும் கட்டுமஸ்தான உடலை பெற பல ஆண்கள் ஜிம்மே கதி என்றும் கிடக்கிறார்கள். அப்படியான உடல் அமைப்பைப் பெற வேண்டுமெனில் தசைகளுக்கு ஊட்டச்சத்தான உணவை கொடுத்து ஒர்க்அவுட்டுகள் செய்ய வேண்டும்.
அப்போதுதான் 6 பேக்ஸ் வைக்க முடியும், நல்ல ஷேப்பை பெற முடியும். இதனால் பல இளைஞர்கள் புரோட்டீன் பவுடரை வாங்கி குடிக்கின்றனர். ஆனால், புரோட்டீன் பவுடரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. நல்ல விஷயம் என்னவென்றால், புரோட்டீன் பவுடருக்குப் பதிலாக சில உணவுகளை உட்கொண்டாலே, புரோட்டீன் பவுடரை விட அதிக நன்மைகளை பெறலாம்.
முட்டை :
ஒரு முழு முட்டையில் ஒரு நாளைக்கு தேவையான புரோட்டீனை பெற முடியும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். முட்டை எளிதில் ஜீரணமாகும் மற்றும் புரதத்தின் பொக்கிஷமாகும். இதுமட்டுமின்றி, பல வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இதில் காணப்படுகின்றன. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.
சிக்கன் ப்ரெஸ்ட் :
வலுவான தசைகளைப் பெற சிக்கன் ப்ரெஸ்ட் சிறந்த உணவாகும். 85 கிராம் சிக்கன் ப்ரெஸ்டில் 26.7 கிராம் புரதம் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் பி, நியாசின் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.
கிரீக் தயிர் :
இது ஒரு வகையான மோர். வேறு சில பொருட்களையும் கலந்து சாப்பிடலாம். இந்த தயிர் செரிமானத்தை மிக வேகமாக அதிகரிக்கிறது. மெலிந்தவர்கள் கிரீக் தயிர் சாப்பிட்டால், விரைவில் தசைகள் வளரும் என்றும் சில ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளது.
பாதாம் :
இது மூளையை கூர்மையாக்குவதற்கு மட்டுமல்ல, புரதத்தின் பொக்கிஷமாகவும் இருக்கிறது. 28 கிராம் பாதாமில் 6 கிராம் புரதம் உள்ளது. இதில் வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. அவை தசைகள் வளர மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளைப் பயன்படுத்தி பாஸ்பரஸ் உடலால் விரைவாக ஆற்றலாக மாற்றப்படுகிறது.
பருப்பு :
பருப்பு ஏழைகளின் வரம் என்று அழைக்கப்படுகிறது. பருப்பில் அதிகபட்ச புரதம் உள்ளது. அரை கப் பருப்பு 9 கிராம் புரதத்தை வழங்குகிறது. நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால், மசூர் பருப்பு உங்களுக்கு சிறந்த உணவாகும். பருப்பில் போதுமான அளவு நார்ச்சத்து, ஃபோலேட், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, தாமிரம் மற்றும் மாங்கனீசு உள்ளது. இது தசை வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.