ரயில் போக்குவரத்து விலை மலிவான ஒரு சுவாரஸ்யமான பயணம். ரயிலில் உள்ள ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு செய்திகளை சொல்லும். அப்படி ரயிலில் ஏறும் முன்பு பெட்டியின் வெளிப்புறத்தில் மஞ்சள் நிற சாய்வு கோடுகளை சில பெட்டியில் பார்த்திருப்பீர்கள். அவை எதற்காக என்பது உங்களுக்கு தெரியுமா? அது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்ட மும்பை முதல் தானே இடையிலான ரயில் சேவை முதல் தற்போது வரை ரயில்வே துறை பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. பயணிகளின் வசதிக்கு ஏற்றார்போல் பல்வேறு மாற்றங்களை செய்து அதனை ஒரு குறியீடுகளுடன் பயணிகளுக்கு தெரிவிக்கிறது ரயில்வே துறை. அப்படி ஒரு குறியீடு தான் அந்த மஞ்சள் நிற சாய்வு கோடு. நாட்டில் உள்ள அதிவேக ரயில்கள் எல்லாம் நீல நிறக் கோடுகளை கொண்டிருக்கும். அவை எல்லாம் முன்பதிவு செய்த (reserved) பெட்டிகள். அதே போல் நீல நிரபெட்டியில் நான்கு முனைகளிலும் கடைசி ஜன்னல்களுக்கு மேல் மஞ்சள் நிற சாய்வு கோடுகள் இருக்கும். அப்படி இருப்பின் அந்த பெட்டிகள் முன்பதிவு இல்லாத (Unreserved) பெட்டிகள் என்று அர்த்தம்.