fbpx

என்னது இனி ரூ.2,000 கிடையாதா..? இதை செய்தால் மட்டுமே பணம் கிடைக்கும்..!! விவசாயிகள் ஷாக்..!!

பிரதம மந்திரி கிசான் நிதி திட்டம் 2019 பிப்ரவரி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம், சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டிற்கு ரூ.6,000 மூன்று தவணைகளில், வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்நிலையில், 2022 டிசம்பர் முதல் 2023 மார்ச் முடிய உள்ள காலத்திற்கான தவணைத் தொகை தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.

என்னது இனி ரூ.2,000 கிடையாதா..? இதை செய்தால் மட்டுமே பணம் கிடைக்கும்..!! விவசாயிகள் ஷாக்..!!

பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம். பொது சேவை மையத்திற்கு சென்றால், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை (One Time Password) பி.எம்.கிசான் இணையதளத்தில் பதிவு செய்து உறுதி செய்யலாம். அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை வைத்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.

என்னது இனி ரூ.2,000 கிடையாதா..? இதை செய்தால் மட்டுமே பணம் கிடைக்கும்..!! விவசாயிகள் ஷாக்..!!

மேலும், உங்களது கைபேசியில் உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி, http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் சென்று ஆதார் e-KYC எனும் பக்கத்திற்குச் சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.. இது தொடர்பாக கூடுதல் விவரம் ஏதும் அறிய விரும்பினால், உங்கள் வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

#சென்னை :மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்த இளம்பெண்..!

Fri Nov 25 , 2022
சென்னை மாநகர பகுதியில் உள்ள அடையாறில் இந்திரா நகர் 3வது குறுக்கில் நிஷா (29) என்ற பெண் , பெசன்ட் நகரில் 5வது அவென்யூ இடத்தில் மசாஜ் சென்டர் ஒன்றை நடத்தி வருகின்றார்.  இந்த இடத்தில் பாலியல் தொழில் நடப்பதாக ரகசியமான முறையில் விபசார தடுப்பு பிரிவினை சேர்ந்த துணை கமிஷனருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் லட்சுமி அவர்களின் தலைமையிலான போலீசார் நேற்று மசாஜ் சென்டர்க்கு சென்று […]

You May Like