கனவு காண்பது ஒரு சாதாரண செயல். சில கனவுகள் நல்லதாகவும் சில கெட்டதாகவும் இருக்கலாம். காலையில் எழுந்தவுடன் சில கனவுகள் மறந்து விடுகின்றன, சில கனவுகள் காலை வரை நினைவில் இருக்கும். ஆழ்ந்த உறக்கத்தில் காணப்படும் சில கனவுகள் நல்லதாகவும் சில சமயம் கெட்டதாகவும் இருக்கும். ஒவ்வொரு கனவுக்கும் சில அர்த்தம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஒவ்வொரு கனவிற்குமான அர்த்தம் கனவு சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. சாஸ்திரங்களின்படி, கனவில் காணும் அனைத்தும் உண்மை என்று அவசியமில்லை. ஆனால் கனவில் சில விஷயங்கள் கண்டால், அது பணக்காரர் ஆவதற்கான அல்லது பண ஆதாயத்தின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. பல நேரங்களில், தூங்கும் போது, பணக்காரர் ஆவதைக் குறிக்கும் சில கனவுகளையும் காண்கிறோம். கனவுகள் எதிர்கால நிகழ்வுகளின் அறிகுறிகளையும் தருவதாக கனவு சாஸ்திரம் கூறுகிறது.. எனவே கனவில் என்னென்ன விஷயங்களைக் கண்டால் பணக்காரர் ஆவதை குறிக்கிறது என்பதை பார்க்கலாம்..
விளக்கு : கனவில் எரியும் தீபம் காணப்பட்டால், அது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த கனவுக்கு வரவிருக்கும் காலத்தில் நீங்கள் அதிக பணம் பெறுவீர்கள் என்று அர்த்தம்.
காதணிகள் : கனவில் காதணிகள் வந்தால் நல்ல சகுணமாக பார்க்கப்படுகிறது.. வரவிருக்கும் காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க போவதை குறிக்கிறது..
மோதிரம் : கனவு சாஸ்திரங்களின்படி, நீங்கள் ஒரு கனவில் மோதிரம் அணிந்திருப்பதைக் காண்பதும் நல்லதாகக் கருதப்படுகிறது. மகா லட்சுமியின் அருள் உங்கள் மீது நிலைத்திருக்கிறது என்று அர்த்தம்.
பாம்பு : ஒரு நபர் கனவில் தனது உண்டியலுக்கு அருகில் ஒரு பாம்பைக் கண்டால், அது வரவிருக்கும் நேரத்தில் பணம் பெறுவதற்கான அறிகுறியாகும்.
பால் : உங்கள் கனவில் நீங்கள் பால் குடிப்பதைப் பார்ப்பது விரைவில் உங்களுக்கு பணம் கிடைக்கும் என்று அர்த்தம்.
தங்கம் : கனவில் தங்கத்தைப் பார்ப்பதும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. மகாலட்சுமியின் அருள் என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும், அந்த நபர் விரைவில் செல்வந்தராவார் என்றும் நம்பப்படுகிறது.
ரோஜா : ஒருவர் கனவில் ரோஜா அல்லது தாமரை மலரைக் கண்டால், அன்னை லட்சுமியின் அருள் அவர் மீது பொழியப் போகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவர் விரைவில் பணக்காரராக போகிறார் என்பதை குறிக்கிறது..