fbpx

ஏடிஎம்மில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால்..!! கட்டணம் திடீர் உயர்வு..? வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!!

ஏடிஎம்மில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.173 கட்டணமாக பிடிக்கப்படும் என்று தகவல் வெளியாகி வருவதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அப்படி வங்கி கணக்கு வைத்துள்ள அனைவரிடமும் பணத்தை எடுப்பதற்கு கட்டாயம் ஏடிஎம் கார்டு இருக்கும். வங்கிக்கு நேரடியாக சென்று அலையாமல் தேவைப்படும்போது ஏடிஎம்களில் எளிதில் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும், ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு சில கட்டுப்பாடுகளும் உள்ளன. அதாவது, ஒரு மாதத்தில் குறிப்பிட்ட முறைதான் இலவசமாக ஏடிஎம்களில் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும் என பல வங்கிகளும் கட்டுப்பாடு விதித்துள்ளன. இது வங்கிக்கு வங்கி மாறுபடும்.

ஏடிஎம்மில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால்..!! கட்டணம் திடீர் உயர்வு..? வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!!

அதாவது ஏடிஎம்களில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால், ஒரு பரிவர்த்தனைக்கு குறிப்பிட்ட தொகை கட்டணம் வசூல் செய்யப்படும். இந்நிலையில், ஏடிஎம்களில் பணம் எடுப்பது தொடர்பான ஒரு செய்தி தற்போது வைரலாகி வருகிறது. இந்தச் செய்தியில் 5 முறைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் ரூ.173 கட்டணமாக பிடிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது முற்றிலும் தவறானது என தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

ஏடிஎம்மில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால்..!! கட்டணம் திடீர் உயர்வு..? வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!!

PIB சார்பாக மேற்கொள்ளப்பட்ட உண்மை சரிபார்ப்பு சோதனையில் இந்த செய்தி முற்றிலும் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் 5 முறை வரை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் அதனை தாண்டி பரிவர்த்தனை மேற்கொண்டால், அதிகபட்சம் ரூ. 21 வரை மட்டுமே பிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இது போன்ற போலியான செய்திகள் அதிகம் பகிரப்பட்டு வருவதால் வாடிக்கையாளர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்..!! தீபாவளி போனஸ் அறிவிப்பு..!! எவ்வளவு தெரியுமா..?

Tue Oct 11 , 2022
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான போனஸ் குறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு, கடந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31ஆம் தேதி இப்படி, பணியில் இருந்தவர்கள் கடந்த நிதி ஆண்டில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் தொடர்ந்து […]
அரசு ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்..!! தீபாவளி போனஸ் அறிவிப்பு..!! எவ்வளவு தெரியுமா..?

You May Like