தீபாவளி என்றாலே அனைவருக்கும் பரிசுகளை வழங்கவும் வாங்கவும் அலாதியான இன்பம்தான். மக்கள் பணம் , இனிப்புகள் , உடைகள் , தங்க நகைகள், உபகரணங்கள் மற்றும் பல்வேறு வகையான பரிசுகளை பகிர்ந்து கொள்கின்றார்கள். இதன் மீது எப்படி வரி விதிக்கப்படுகின்றது என்பது பற்றி பார்க்கலாம்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை என்றால் கார்கள் , சொத்து போன்ற விலை உயர்ந்த பரிசுகளை பகிரந்து கொள்கின்றார்கள். சில நிறுவனங்களில் கூட தீபாவளி பரிசை போனஸாக வழங்குகின்றார்கள். தீபாவளி பரிசுகளை பகிர்வது என்பது பொதுவானது என்றால் கூட விலை உயர்ந்த பரிசுகளுக்கு வரி தாக்கங்கள் இருக்கலாம் என்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
இது பற்றி முறையாக தகவல் அளிக்கப்படவில்லை என்றால் வரி செலுத்துபவர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும் . வருமான வரி சட்டத்தின் பிரிவு 56(2)ன் படி , ஒரு நிதியாண்டில் பெறப்படும் பரிசுகளுக்கு ஸ்லாப் விகிதத்தின்படி ’ பிற ஆதாரங்களில்இருந்து வருமானம் ’ என்ற வகையில் வரி விதிக்கப்படலாம்.
இருந்தாலும் , நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசு வழங்கினால் அதற்கு விலக்கு அளிக்கப்படுகின்றது. பணம் , தங்கம் , கார் , சொத்து போன்ற பரிசுகளின் மீதான வரி தாக்கம் மற்றும் விலக்குகள் பற்றி மேலும் அறிந்து கொள்வோம்.
’ தீபாவளி பரிசுகளுக்கு வரி விதிக்கப்படுவது பொதுவாக அந்த பரிசுப் பொருளின் தன்மை , பணம் , தங்கம் , கார் , சொத்துக்களை பரிசாக அளிக்கும் நபரை பொறுத்தது. இந்த வரி விதிப்பு வரி சட்டம் 1961ன் படி பிரிவி 56 (2) ன் படி நிர்வகிக்கப்படும் என தணிக்கை ஆலோசனை குழுவான ஆர்.எஸ்.எம். இந்தியா நிறுவனர் சுரேஷ் சுரானா தெரிவித்துள்ளார்.
பரிசுகள் மீதான வருமான வரி சில வரம்புகளுக்குட்பட்டது. கார் பரிசாக வழங்கும் போது அதற்கு வரி இல்லை . வருமான வரிச் சட்டத்தின் கீழ் சொத்து வரையறையில் பங்குகள் மற்றும் பத்திரங்கள் , நகைகள் , தொல்பொருள் சேகரிப்புகள் , வரை படங்கள் , ஓவியங்கள் , சிற்பங்கள் மற்றும் கலை பொருட்கள் , பொன் வேலைப்பாடுகள் கொண்ட பொருட்கள் அடங்கும்.
ரூ.50,000க்கும் தேல் மதிப்புள்ள கீழ்வரும் பரிசுகளில் ஏதாவது வருமான வரி விதிக்கப்படும். கார் , சொத்து இந்த வரம்பில் இல்லை. பெறுநருக்கு வரி கிடையாது. கார் சொத்து வரம்பிற்குள் பிரத்யேகமாக உள்ளடக்கப்படவில்லை என்பதால் காரின் பரிசு இந்த பரிவின் கீழ் வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருங்கிய உறவினராக இருந்தால் , அதற்கு வரி கிடையாது. மனைவி , பெற்றோர் உடன் பிறந்தவர்கள் , துணைவர்களிடம் இருந்து பெறப்படும் பரிசுகளுக்கு வர விலக்கு அளிக்கப்படுகின்றது. உறவினர் என்ற சொல்லுக்கு குறிப்பிட்ட வரையறை உள்ளது. மனைவி , சகோதரன் , சகோதரி , மனைவி , பெற்றோர், தாத்தா , பாட்டி போன்ற பரம்பரையினரோ சந்ததியினரோ வரையறைக்குள் வருவார்கள். தூரத்து உறவினர் என்றார் அவர்கள் இதில் அடங்கமாட்டார்கள்.