முடி உதிர்வை தடுத்து வளர்ச்சியை அதிகரித்து ஆரோக்கியமான கூந்தல் வேண்டும் என நினைத்தால், பலவகை ஊட்டச்சத்துக்கள் அடங்கிய சீரான உணவுகளோடு சேர்த்து முடி ஆரோக்கியத்திற்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துகளாக இருக்கும் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்றவற்றை சேர்த்து கொள்வதும் அவசியம். எனினும், ஜிங்க் நிறைந்த உணவுகளை வழக்கமாக சாப்பிடுவது முடி உதிர்வை நிறுத்தி அதன் வளர்ச்சியை கணிசமாக அதிகரிக்கும்.
பொதுவாக முட்டைகள் அமினோ ஆசிட்ஸ் மற்றும் ஜிங்க்கின் வளமான மூலமாக இருக்கின்றன. முட்டைகளை அடிக்கடி டயட்டில் சேர்த்து கொள்வது முடி உதிர்வை நிறுத்தவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது. இது தவிர முட்டைகளை ஹேர் மாஸ்க்காக பயன்படுத்துவது கூட முடி உதிர்வை நிறுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது.
அதேபோல், எள்ளு விதைகளில் ப்ரோட்டீன்ஸ், ஜிங்க் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், எள் எண்ணையை மேற்பூச்சாக முடிக்கு பயன்படுத்துவதும் கூட முடி வளர்ச்சியை அதிகரிக்கும். எள் எண்ணெய் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை தூண்டி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
அதேபோல், பருப்பு வகைகள் தாவர அடிப்படையிலான புரதத்தின் சிறந்த ஆதாரமாக மட்டுமில்லாமல் சிறந்த அளவு ஜிங்க்கையும் நமக்கு வழங்குகிறது. சூப்ஸ், சாலட்ஸ் ஆகியவற்றில் பருப்பு வகைகள் சேர்க்கலாம். முடியின் நிலையை மேம்படுத்த பருப்பு வகைகள் உதவுகின்றன.
சிப்பிகள் (Oysters) போன்ற கடல் உணவுகள் முடி வளர்ச்சிக்கும் பெரிதும் உதவக்கூடியவை. இவற்றில் ஜிங்க் சத்து மிகுதியாக காணப்படுகிறது. இது தவிர இவற்றில் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன. கணிசமான அளவு ஜிங்க் அடங்கியிருக்கும் பிற கடல் உணவுகளில் ஸ்கேட், நெத்திலி, மத்தி, நண்டு, இறால் மற்றும் Winkles ஆகியவை அடங்கும்.
இயற்கையாகவே ஜிங்க், இரும்பு மற்றும் வைட்டமின் ஈ போன்ற கூந்தலுக்கு தேவையான ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் பூசணி விதைகளில் உள்ளன. பூசணி விதைகளை டயட்டில் சேர்த்து கொள்வது முடி உதிர்வை நிறுத்தவும், முடி வளர்ச்சியை துரிதப்படுத்தவும் உதவும்.