fbpx

புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் இவ்வளவு சிறப்பா..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க…

மாதங்களில் சிறப்பான மாதமாக மார்கழி மாதம் கருதப்படுகிறது.. ஏனெனில் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கீதையில் கிருஷ்ணரே கூறியுள்ளார்.. மார்கழி மாதத்தைப் போலவே புரட்டாசி மாதமும் ஆன்மீகத்தில் சிறப்பான மாதமாக இருக்கிறது.. புரட்டாசியில் பல திருவிழாக்கள், நடக்கின்றன.. திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன.

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது தெரியுமா? பலரும் அறியாத தகவல் இதோ..!

தேவி பராசக்தியைப் போற்றும் நவராத்திரி விழாவும் இம்மாதத்தில் தான் நடை பெறுகின்றது. இது தவிர திருப் பதி வெங்கடாசலபதியை குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.

பொதுவாக சனிக்கிழமையில் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பு என்கின்றனர் சான்றோர்கள்.. குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை. ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று என்று கூறப்படுகிறது. புதனின் அதி தேவதையாகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹாவிஷ்ணு.

ஆகவே விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. இந்த மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்..

Maha

Next Post

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி செய்தி.. பைக், ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்திய பிரபல நிறுவனம்..

Sat Sep 24 , 2022
ஹீரோ மோட்ட்டோகார்ப் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்தி உள்ளது.. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு பைக் மற்றும் ஸ்கூட்டர் உற்பத்தி செய்து வருகிறது.. பன்னாட்டு நிறுவனமாக இயங்கி வரும் இந்த நிறுவனம், முன்னதாக, ஹீரோ ஹோண்டா என்ற பெயரில் கூட்டு நிறுவனமாக இயங்கி வந்தது. பின்னர் இரு நிறுவனங்களும் தனித்தனியே பிரிந்து உற்பத்தி பணிகளை கவனித்து வருகின்றன. அடுத்த மாதம் எலெக்ட்ரிக் […]

You May Like