கோடைகாலத்தில் ஏற்படும் வெப்பத்தால் சரும ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இரசாயனம் அதிகம் இருக்கும் கிரீம்களை பயன்படுத்துவதை தவிர்த்து அதற்கு பதிலாக வீட்டில் இருக்கும் இரண்டு பழங்களை பயன்படுத்தி இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். வைட்டமின் டி அதிகம் உள்ள ஆரஞ்சு மற்றும் பப்பாளி பழங்களை மூலம் எளிய முறையில் ஃபேஸ் பேக் செய்து பயன்படுத்தலாம். இந்த ஃபேஸ் பேக்கை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நன்கு பழுத்த பப்பாளி பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி அவற்றுடன் ஆரஞ்சு பழ சாறு மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து விட வேண்டும். இதனை ஸ்கின்னில் நன்றாக அப்ளை செய்ய வேண்டும். இதற்கு முன்னதாக முகத்தை நன்றாக சுத்தம் செய்த பிறகு முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி சுமார்10 முதல் 15 நிமிடங்களுக்கு அப்படியே இருக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவ வேண்டும். பப்பாளி பழத்தில் உள்ள சத்துக்கள் முகத்தில் படியும் அழுக்குகளை நீக்கி பொலிவான சருமத்தை நமக்கு தருகிறது. ஆரஞ்சு பழத்தில் பாக்டீரியா நுண்ணுயிரிகளை எதிர்க்கும் சக்தி உள்ளது. இது முகப்பரு, அதிகப்படியான எண்ணெய் பசை போன்றவற்றை நீக்குகிறது. தேனில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்டுகள் மென்மையான சருமத்தை தருகிறது. இதனால் இளமையான தோற்றம் உண்டாகும். இது ஈரப்பதத்தை தக்க வைக்கும். மேலும், சுருக்கங்களை நீக்கவும் உதவுகிறது.