முன்னோர்களின் புகைப்படங்களை வீட்டின் பூஜையறையில் வைக்கலாமா? என்று பலருக்கும் சந்தேகம் உள்ளது. அதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பெரும்பாலான வீடுகளில் முன்னோர்களின் புகைப்படங்களை வைப்பது வழக்கமாக உள்ளன. நமது மூதாதையர்களின் நினைவாக அல்லது அவர்களின் ஆசீர்வாதம் எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் புகைப்படங்கள் வைக்கப்படுகின்றன. மூதாதையர்களின் படத்தை வீட்டில் வைத்திருப்பது சரியானது. ஆனால் அவர்களின் படங்களை வைத்திருக்கும்போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். இல்லையெனில், உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படாலாம். வீட்டில் முன்னோர்களின் படங்களை வைக்கும்போது மனதில் கொள்ள வேண்டியவற்றை சில விஷயங்களை தற்போது பார்க்கலாம்.
சிலர் தங்கள் முன்னோர்களின் படங்களை வீட்டின் பூஜை அறையில் வைத்து வணங்குகிறார்கள். ஆனால், வேதங்களின்படி, முன்னோர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள், கௌரவிக்க வேண்டியவர்கள் என்றாலும், மூதாதையர்களுக்கும் தெய்வங்களுக்கும் வித்தியாசம் உள்ளது. எனவே, பூஜை அறையில் முன்னோர்களின் படத்தை வைப்பது சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும், அது தெய்வங்களுக்கு உகந்ததல்ல என்றும் கூறப்படுகிறது. முன்னோர்களின் படங்களை ஒருபோதும் தொங்கவிடாதீர்கள். அத்தகைய படங்கள் ஒரு மர ஸ்டாண்டில் வைக்கப்பட வேண்டும். மூதாதையர்களின் ஒன்றுக்கு மேற்பட்ட புகைப்படங்களை வீட்டில் வைக்கக்கூடாது. எல்லோரும் மூதாதையர்களின் படங்களை எல்லோருடைய பார்வையும் இருக்கும் இடங்களில் வைக்கிறார்கள், ஆனால் அதை செய்யக்கூடாது. போகும் வழியில் இறந்தவர்களின் படங்களை பார்ப்பதால் ஏமாற்றம் ஏற்படுகிறது.
மேலும், முன்னோர்களின் படங்களை படுக்கையறையிலோ, வீட்டின் நடுவிலோ அல்லது சமையலறையிலோ வைக்கக்கூடாது. இது முன்னோர்களை கோபப்படுத்துகிறது. இது வீட்டின் அமைதியையும், நிம்மதியையும் மோசமாக பாதிப்பதாக கருதப்படுகிறது. முன்னோர்களின் புகைப்படங்கள் ஒருபோதும் உயிருடன் வாழும் மக்களின் புகைப்படங்களுடன் இணைக்கப்படக் கூடாது. இதனால் வாழும் நபர்களின் ஆயுட்காலம் குறையும் என்று நம்பப்படுகிறது. இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதுடன் மனரீதியாக தொந்தரவையும் உருவாக்கும் என்று கூறப்படுகிறது.