fbpx

Job Alert | இந்திய பொதுத்துறை வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! சம்பளம் ரூ.41,000..!! இன்னும் 4 நாள் தான் இருக்கு..!!

இந்திய பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 21ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியன் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட இந்திய பொதுத்துறை வங்கிகளில் 3,049 புரொபேஷனரி அதிகாரி, மேனேஜ்மென்ட் பயிற்சியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

இந்த காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.850 ஆகும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்தவர் ரூ.175 மட்டும் கட்டணமான செலுத்தினால் போதும். இந்த கட்டணங்களை ஆன்லைனில் செலுத்த வேண்டும். கல்வித் தகுதி 21.8.2023 தேதியின்படி, ஏதாவது ஒரு துறையில், இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 1.8.2023 தேதியின்படி, 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.41,960 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியான விண்ணப்பதாரா்கள் https://www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆகஸ்ட் 21ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோவை, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, கடலூர், மதுரை, நாகர்கோவில், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, வேலூர், விருதுநகர் ஆகும். மேலும், இடஒதுக்கீடு மற்றும் இதர தகுதி நிபந்தனைகள் பற்றிய கூடுதல் விவரங்களை https://www.ibps.in இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

Chella

Next Post

AI கேமரா: ஓட்டுனர்களே.. இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. விதிமீறிய 300 ஓட்டுனர்களை பிடித்து கொடுத்த AI தொழிநுட்பம்..

Thu Aug 17 , 2023
யுனைடெட் கிங்டம், AI கேமரா மூலம் மூன்று நாட்களில் விதிமீறல்களில் ஈடுபட்ட 300 ஓட்டுனர்கள் கண்டறியப்பட்டுள்ளன. வாகனத்தை இயக்கும்போது செல்போன் பயன்படுத்திய 117 பேர்கள், மற்றும் சீட் பெல்ட் அணியாமல் இருந்த 180 பேர்கள் என மொத்தம் 297 பேர்களை அடையாளம் காணப்பட்டு காவல்துறைக்கு உதவியுள்ளது செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம். கடந்த ஆண்டு இந்த தொழில்நுட்பத்தை நாங்கள் சோதித்தபோது, சீட் பெல்ட் அணியாமல் இருந்த ஓட்டுநர்களின் எண்ணிக்கையால் […]

You May Like