விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த பொருட்களை உலகளவில் வியாபாரம் செய்யும் நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் உள்ள காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்தில் பணிபுரியத் தேவையான தகுதிகளைத் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள்.
பணியின் முழு விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | வயது | சம்பளம் |
Company Secretary | 1 | அதிகபட்சம் 65 வயது | ரூ.75,000/- |
Hindi Translator- cumtypist | 1 | அதிகபட்சம் 65 வயது | ரூ.40,000/- |
கல்வித்தகுதி:
Company Secretary பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுகள் அனுபவம் வேண்டும்.
Hindi Translator- cumtypist பணிக்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மொழிபெயர்ப்பு மற்றும் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்குத் தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அறிவிப்பு விடுக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://www.antrix.co.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் அதனைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி :
Sr.Manager (P&GA), Antrix Corporation Limited, Antariksh Bhavan Campus, New BEL Road, Bengaluru – 560094.Telephone No. 080 – 22178302.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 30.11.2022