தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்றுனர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
காலியிடங்கள் எண்ணிக்கை: 97
விளையாட்டு பிரிவுகள்: Archery, Athletics (sprints), Athletics (Jumps), Athletics (Throws), Para Athletics, Boxing, Basketball, Fencing, Football, Gymnastics, Handball, Hockey, Judo, Kabaddi, Kho-Kho, Swimming (Diving), Swimming, Taekwondo, Tennis / Soft Tennis, Volleyball, Weightlifting, Wrestling and Wushu
ஊதிய விகிதம்: நிலை 12 (ரூ. 35,600 – 1,12,800)
விண்ணப்பங்களை, www.sdat.tn.gov.in என்ற இணைய வழியில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். டிசம்பர் 12ஆம் தேதி முதல் 30ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களும் மேற்கண்ட இணையவழியில் மட்டும் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான விரிவான அறிவிக்கை, இடஒதுக்கீடு விவரங்கள், தேர்வு முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் https://www.sdat.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.