fbpx

Sex | உடலுறவு வைத்துக் கொள்ளும் முன் இந்த விஷயங்களை மட்டும் மறந்துறாதீங்க..!! இதோ சில டிப்ஸ்..!!

காதல் அல்லது திருமணம் போன்ற ஏதாவது ஒரு உறவில் நுழையும்போது கண்டிப்பாக அவர்களுடன் உடல் அளவில் நெருங்க வேண்டும் என நினைப்பது வழக்கம். ஒரு பக்கம் இது நம்மை உற்சாகப்படுத்தினாலும் பதற்றத்தையும் உருவாக்கும். “நம் பார்ட்னருக்கு படுக்கையில் என்ன பிடிக்கும், நம்மால் அவர் சுகம் அடைவாரா, நம்மிடம் அவர் எதிர்பார்ப்பது என்ன..” போன்ற பல கேள்விகள் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். இவை அனைத்தும் மிகவும் இயல்பானவையே. இதை நினைத்து பயப்படுவதை விட்டுவிட்டு உடலுறவிற்கு தயாராவது எப்படி..? இதோ சில டிப்ஸ்..!

பார்ட்னருக்கு ஹிண்ட்

படுக்கைக்கு வந்தவுடன் யாரும் முதலில் ‘அந்த’ நிலைக்கு தங்களை தயார்படுத்தியிருக்க மாட்டார்கள். சில சமயங்களில் அப்படியே முன்னேற்பாடுகள் இல்லாமல் படுக்கைக்கு சென்றாலும் முழுமையாக அவர்களால் உடலுறவு (Sex) மனநிலைக்கு உடனே சென்று விட முடியாது. இதை தவிர்க்க ஒரு வழி இருக்கிறது. உடலுறவு வைத்துக்கொள்ளும் முன் உங்கள் பார்ட்னருக்கு ஹிண்ட் கொடுக்க வேண்டும். அது, Sexting ஆக இருக்கலாம். அல்லது, நீண்ட முத்தமாக இருக்கலாம். அவர்களை பார்த்து மயக்கும் வகையில் கண் அடிப்பதாகவும் இருக்கலாம். இதையெல்லாம் செய்வதால் நம் உடலும் மனதும் கண்டிப்பாக உடலுறவு மனநிலைக்கு தயாராகிவிடும். இது, உடலுறவு சுகத்தையும் அதிகரிக்க உதவும். 

பாதுகாப்பு

உடலுறவு வைத்துக்கொள்ளும் முன் பாதுகாப்புக்கான பொருட்களை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பம் அல்லது பால்வினை நோய்களை தடுக்க வேண்டும் என்றால் ஆணுறைகள் மற்றும் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட கர்ப்பத்தடுப்பு மாத்திரைகள் முக்கியம். மேலும், உடலுறவு வைத்துக்கொள்ளும் நிலைக்கு வந்து விட்ட பிறகு அதையெல்லாம் தேடிக்கொண்டிருந்தால் கண்டிப்பாக சுகம் பெற முடியாது. 

மனநிலை

சிறந்த உடலுறவிற்கு சிறப்பான மனநிலையும் முக்கியம். உடலுறவு வைத்துக்கொள்ள இருக்கும் அறை பெரிதும் வெளிச்சம் புகாத இடமாக இருக்க வேண்டும். இதனுடன் உங்கள் பார்ட்னருக்கும் உங்களுக்கும் பிடித்த இசையை ஒலிக்க செய்யலாம். லைட் மிகவும் குறைவான வெளிச்சத்தில் இருக்க வேண்டும். வாசனை மிகுந்த மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்கலாம். நல்ல ரூம் ஸ்ப்ரேவை உபயோகிக்கலாம். இது, கண்டிப்பாக உடலுறவு சுகத்தையும் அதிகரிக்க உதவும். 

மூளையை தயார்படுத்துங்கள்

உடலுறவு, மனதில் இருந்தும் மூளையில் இருந்தும்தான் ஆரம்பிக்கிறது. அதைப்பற்றி நம் எண்ணக்குதிரைகளை ஓட விட வேண்டும். உடலுறவு குறித்த கதைகளை படிக்கலாம். இதை இரவில்தான் செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஒரு நாளில் அவ்வப்போது இவ்வாறு செய்தாலே போதும். கண்டிப்பாக இரவில் சுகம்தான். 

லிஸ்ட் போடுங்கள்

படுக்கையறையில் உங்கள் பார்ட்னருடன் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை எல்லாம் ஒரு லிஸ்ட் போடுங்கள். அதை பேப்பர் பேனா எடுத்து எழுத வேண்டாம். மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அது எந்த விஷயமாக வேண்டுமானாலும் இருக்கலாம். உடலுறவில் செய்ய பல விஷயங்கள் இருக்கிறது. அவற்றை கற்றுக்கொண்டு உங்கள் பார்ட்னருக்கும் கற்றுக்கொடுங்கள். 

அழகு

உங்களை அழகுப்படுத்திக் கொள்வது படுக்கையறை சுகத்தை பன்மடங்காக அதிகரிக்க உதவும். அது சாதாரணமாக ஒரு வாசனை திரவியத்தை பூசிக்கொள்வதாக இருக்கலாம். லிப்ஸ்டிக் போன்ற அழகு சாதனங்களை பூசிக்கொள்வதாக இருக்கலாம். இதை உங்கள் பார்டனருக்காக மட்டுமன்றி உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கவும் செய்யலாம். 

மூச்சுப்பயிற்சி

ஒரு நிலையாக மனதை நிறுத்தி மூச்சுப்பயிற்சி செய்வது உடலுறவு வாழ்க்கையை கண்டிப்பாக உயர்த்தும். மனதை ஒருநிலைப்படுத்துவது, உச்சமடைய உபயோகிப்பதாகவும் நம் உடல் மீது நமக்கு இருக்கும் கவனத்தை இவை அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால் உடலுறவு வைத்துக்கொள்ளும் முன்பு, சில நிமிடங்கள் மூச்சுப்பயிற்சி செய்வது நலம்.

Chella

Next Post

தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்த இரு மகள்கள் அதிவிரைவாக வந்த மின்சார ரயில்……! மகள்கள் கண் முன்னே தாய்க்கு நேர்ந்த பரிதாபகதி…..!

Mon Aug 7 , 2023
சமீப காலமாக ரயில் விபத்துகளும், ரயிலில் மாட்டி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பலர் தற்கொலை எண்ணத்தோடு, தண்டவாளத்தில் நின்று தங்களுடைய உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். சிலர் கவனக்குறைவு காரணமாக, ரயிலில் அடிபட்டு உயிரிழந்து விடுகிறார்கள். அந்த வகையில், சென்னையில், ஒரு சம்பவம் நடைபெற்று உள்ளது. அதாவது, மகள்கள் கண் முன்னே தாய் ஒருவர் மின்சார ரயிலில் அடிபட்டு உடல் இரண்டு துண்டாகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. […]

You May Like