fbpx

தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்..!! மாதம் ரூ.48,700 வரை சம்பளம்..!! விண்ணப்பிப்பது எப்படி..?

சென்னை ராயப்பேட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வர் திருக்கோயிலில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்..!! மாதம் ரூ.48,700 வரை சம்பளம்..!! விண்ணப்பிப்பது எப்படி..?

பணியின் விவரங்கள்…

(1). பணி: கணினி இயக்குபவர் – 1

சம்பளம்: மாதம் ரூ.15,300 முதல் ரூ.48,700 வரை

கல்வித்தகுதி: Diploma in computer science முடித்திருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

(2). பணி: மின் பணியாளர் – 1

சம்பளம்: மாதம் ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை

கல்வித்தகுதி: ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மின் உரிமம் வாரியத்தின் B- சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

(3). பணி: அர்ச்சகர் நிலை 2 – 1

சம்பளம்: மாதம் ரூ.13,200 முதல் ரூ.39,900 வரை

கல்வித்தகுதி: தமிழ் மொழியில எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஆகமவிதப்பள்ளி அல்லது வேத பாடச்சாலையில் ஓராண்டு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

(4). பணி: ஓதுவார் – 1

சம்பளம்: மாதம் ரூ.12,600 முதல் 39,900 வரை

கல்வித்தகுதி: தமிழ் மொழியில எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். தேவார பாடச்சாலையில் அல்லது தொடர்புடைய துறைகளில் 3 ஆண்டு பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

(5). பணி: சுயம்பாகி – 1

சம்பளம்: மாதம் ரூ.13,200 முதல் ரூ.41,800 வரை

கல்வித்தகுதி: தமிழ் மொழியில எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஆகமவிதிப்படி கைவைத்தியம் மற்றும் பிரச்சாரம் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

(6). பணி: மேளக்குழு நாதஸ்வர பணிக்கும் மட்டும் – 1

சம்பளம்: மாதம் ரூ.15,300 முதல் ரூ.48,700 வரை

கல்வித்தகுதி: தமிழ் மொழியில எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இசைப்பள்ளிகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

(7) பணி: பகல் காவலர் – 1

சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை

கல்வித்தகுதி: தமிழ் மொழியில எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்

(8). பணி: இரவு காவலர் – 1

சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை

கல்வித் தகுதி: தமிழ் மொழியில எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

மேற்படி தகுதிகள் கொண்ட விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகளை hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் 17.11.2022 அன்று மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும். அதன் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

செயல் அலுவலர்,
அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கோயில்,
இராயப்பேட்டை,
சென்னை-14.

விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி சான்றின் நகல்கள், சாதிச்சான்று நகல், குடும்ப அடையாள அட்டை நகல், முன்னுரிமைக்கான சான்றின் நகல், ஆதார் அட்டை நகல், வேலைவாய்ப்பு பதிவு அட்டை நகல், சுயவிலாசமிட்ட ரூ.25/-க்கான தபால் தலையுடன் கூடிய உறை ஆக்கியவற்றையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

Chella

Next Post

அரசின் திட்டத்தை கண்காணிக்க குழு...! விரைவில் மத்திய அரசு அமைக்க உள்ளது...!

Mon Nov 7 , 2022
மத்திய அரசின் திட்டங்கள் பயனாளிகளை சென்று சேர்கிறதா என்பதை கண்காணிக்க ஒரு குழுவை மத்திய அரசு அமைக்க உள்ளது என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். மத்திய அரசின் திட்டங்கள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இதனைத் தெரிவித்த அவர், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், மத்திய […]

You May Like