fbpx

LIC-யில் சூப்பர் திட்டம் அறிமுகம்..!! 90 நாள் குழந்தை முதல் சேரலாம்..!! முழு விவரம் உள்ளே..!!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் சார்பில் ‘எல்ஐசி ஜீவன் ஆசாத்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து எல்ஐசி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”எல்ஐசி ஜீவன் ஆசாத் திட்டம் பங்குச்சந்தையில் சேராத, தனி நபர், சேமிப்பு ஆயுள்காப்பீடு திட்டமாகும். இதன் மூலம் உங்களுக்கு சேமிப்பும், பாதுகாப்பும் கிடைக்கும். பாலிசிகாலத்தின்போது ஆயுள்காப்பீட்டாளர் துரதிருஷ்டவசமாக இறந்துவிட்டால், அவரது குடும்பத்திற்கு இந்த திட்டம் மூலம் நிதி கிடைக்கும். மேலும், இந்த திட்டத்தில் கடனும் பெற்றுக்கொள்ளலாம். பாலிசி முதிர்வுத் தேதியில் உறுதி செய்யப்பட்ட உத்தரவாதமான பணம் பாலிசிதாரருக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் குறைந்தபட்ச அடிப்படை உத்தரவாத தொகை ரூ.2 லட்சமாகவும், அதிகபட்ச அடிப்படை உத்தரவாத தொகை ரூ.5 லட்சமாகவும் உள்ளது.

LIC-யில் சூப்பர் திட்டம் அறிமுகம்..!! 90 நாள் குழந்தை முதல் சேரலாம்..!! முழு விவரம் உள்ளே..!!

இந்த பாலிசியை 15 முதல் 20 ஆண்டுக் காலத்துக்கு எடுக்க முடியும். மொத்த பாலிசி காலத்தில் 8 ஆண்டுகள் மட்டும் பிரீமியம் செலுத்தினால் போதுமானது. இந்த திட்டத்தில் 90 நாள் குழந்தை முதல், 50 வயது பெரியவர் வரை சேர முடியும். பிரீமியத்தை ஆண்டு, அரையாண்டு, காலாண்டு, மாத இடைவெளியில் செலுத்தலாம். முகவர்கள் மூலமும், ஆன்லைனிலும், எல்ஐசி அலுவலகங்களிலும் இந்த பாலிசியில் சேர முடியும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு www.licindia.in என்ற இணையதளத்தை காணலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

பிப்ரவரி 24 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்து ட்ராய் அறிவிப்பு...! உடனே உங்க கருத்தை பதிவு செய்ய வேண்டும்..!

Fri Jan 20 , 2023
இந்தியாவில் நீருக்கு அடியிலான கேபிள், தரை இணைப்புகளுடன் இணையும் பகுதியின் உரிமக் கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறை செயல்முறை குறித்த ஆலோசனை அறிக்கையை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) டிசம்பர் 23, 2022 அன்று வெளியிட்டிருந்தது. இதில் வெளியிடப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து பங்குதாரர்கள் தங்களது கருத்துக்களை ஜனவரி 20, 2023 வரையும், எதிர் கருத்துக்களை பிப்ரவரி 3, 2023 வரையும் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. கருத்துக்கள் மற்றும் எதிர் கருத்துக்களை […]

You May Like