fbpx

வீட்டில் இருக்கும் பழைய பொருட்கள் கூட வெடிக்கும்… இந்த பொருட்கள் வீட்டில் இருந்தால் எச்சரிக்கை!!

எக்காரணத்தைக் கொண்டும் எரியாத பல்புகள், ஃபியூஸ் ஆன ட்யூப் லைட்டுகள், ஸ்பீக்கர் காந்தங்கள் உள்பட எக்காரணத்தை கொண்டும் சேமித்து வைக்காதீர்கள். ஏன் என்ற காரணத்தை இங்கே பார்க்கலாம்…

வீட்டில் பழைய பொருட்களை வைத்துக் கொள்ளக் கூடாது. குறிப்பாக எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவற்றை மட்டும் வீட்டில் வைத்துக்கொள்ள கூடாது எனவும் இதில் அப்படி என்ன ஆபத்து உள்ளது என இந்த பதிவில் விளக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரானிக் பொருட்களை நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். இல்லை என்றால் இந்த விஷயத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்யும் பெரும்பாலான நிறுவனங்கள் அந்தந்த எலக்ட்ரானிக் பொருட்களின் பேக்கேஜிங்கில் காலாவதியாகும் தேதிகளை குறிப்பிட்டு இருக்கமாட்டார்கள். இது உயிருக்கு அச்சுறுத்தலாகிவிடும் என ஆராய்ச்சியாளர்கள்.

எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் எந்தவிதமான காலாவதியாகும் தேதியையும் குறிப்பிடவில்லை என்பதால் அந்த எலக்ட்ரானிக் பொருளுக்கு காலாவதி கிடையாது என்பது அர்த்தமில்லை. வீட்டில் ஏதாவது மூலையில் பழுதான எலக்ட்ரிக் பொருட்களை வைத்திருந்தால் நீங்கள் கவனித்திருக்க முடியும்.

வீடுகளில் நாம் சேமித்து வைத்திருக்கும் எலக்ட்ரானிக் பொருட்கள் தொடர்பாக ஒரு கசப்பான உண்மை என்ன என்றால் பழைய எலக்ட்ரானிக் பொருட்கள் நமது உயிருக்கு அச்சுறுத்தலாகும். அதை தூக்கி போடாமல் வைத்திருந்தால் பலத்த சேதத்தை ஏற்படுத்தும். எனவே உங்கள் வீட்டில் இருந்து நீங்கள் உடனே தூக்கி போட வேண்டிய 8 எலக்ட்ரானிக் பொருட்களின் பட்டியலும் அதை தூக்கி போடவில்லை என்றால் என்ன நடக்கும் என விளக்கியுள்ளது.

பழைய செல்போன்களை தூக்கி போடவில்லை என்றால் அதில் உள்ள பேட்டரி காலப்போக்கில் இன்னும் அதிக சேதமாகி வெடிக்கலாம். எனவே செல்போன் வெடிப்பு சம்பவங்களை அதை தூக்கி போடுவதால் நம்மால் தடுக்க முடியும். தூக்கிபோடப்படும் பொருட்களை மறுசுழற்சி செய்துவிடுவார்கள் எனவே அச்சப்பட தேவையில்லை.

காலாவதியான ரவுட்டர்களை ஈசியாக ஹேக் செய்ய முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?. ஒரு பழைய ரவுட்டர் இருந்தால் அது சைபர் குற்றங்களுக்கு ஒரு திறந்த அழைப்பு சற்று பழைய ரவுட்டர்களாக இருந்தால்அதிநவீன ஹேக்கிங் முறைகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்கமுடியாது. எலக்ட்ரானிக் பொருட்கள் ஷார்ட் சர்கியூட் மற்றும் தீ விபத்துக்களுக்கு கூட வழி வகுக்கும்.

பவர் கேபிள்களை காலப்போக்கில் இன்சுலேஷன் பண்புகளை இழக்கும். நிலைமை இப்படி இருக்கும்போது நீங்கள் மிகவும் பழைய பவர் கேபிள்களை பயன்படுத்தினால் அது ஷாக், தீப்பொறி ஏற்பட்டு தீ விபத்து ஏற்படும். எனவே பயன்பாட்டில் உள்ள மற்றும் பயன்பாட்டில் இல்லாத எல்லா வகையான பவர் கேபிள்களையும் மற்ற நல்ல பவர் கேபிள்களில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

உடைந்த பழைய வால் சாக்கெட்டுகளை எப்போம் நம் வீட்டில் வைத்திருக்க கூடாது. குறிப்பாக வீட்டில் குழந்தைகள் இருந்தாலும் இன்னும் ஆபத்துதான். சாக்கெட்டுகளின் உடைந்த துண்டுகள் அல்லது போல்ட்கள் ஆனது உங்களுக்கோ உங்களின் குழந்தைகளுக்கோ வெட்டுக்காயங்களை ஏற்படுத்தும். உடைந்த அல்லது, சேதமடைந்த சாக்கெட்டுகள் ஆனது ஷாக்கடிக்கலாம். தீ விபத்தை ஏற்படுத்தலாம் எனவே உஷாராக இருக்க வேண்டும்.

பல்புகள் 100க்கு 99 வீடுகளில் பழைய மற்றும் பழுதான பல்புகள் டியூப் லைட்டுகள் உள்ளன. இங்கே நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான தகவல் என்ன என்றால் பழை பல்புகள் டியூப்லைட்டுகளில் டங்ஸ்டன் இழைகள், இரசாயனங்கள் மற்றும் வாயுக்கள் உள்ளன. ஆக அவைகள் எப்போது வேண்டுமானாலும் உடையலாம்,வெடிக்கலாம் எனவே எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்.

பல்புகள், டியூப் லைட்டுகளில் இருந்து சிதறும் கண்ணாடித் துண்டுகள் வெட்டுக் காயங்களுக்கு வழி வகுக்கலாம். எனவே பல்புகளோ மற்றும் டியூப் லைட்டுகளோ பழுதாகிவிட்டால் அது உடையாதபடி மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவாறு தூக்கி எறிந்துவிடவும்.

பழைய சார்ஜர்கள், உயர் மூலக்கூறு பாலிமர், கண்ணாடி இழை, தூய்மையான செப்புத் தகடு மற்றும் பிரிண்டட் கூறுகள் போன்ற பொருட்களால் ஆன சர்க்யூட் போர்டுகளை பயன்படுத்துகின்றன. ஒரு சர்க்யூட் ஆனது மிகவும் பழையதாகிவிட்டால், அது செயலிழந்து பின் வெடிக்கவும் செய்யலாம்எனவே பழைய சார்ஜர்களை தூக்கி எறிவது நல்லது.

பழைய இயல்பேரன்கள் மற்றும் ஸ்பீக்கர்களில் ’நச்சு பொருட்கள்’’ உள்ளன. உதாரணமாக காந்தங்கள், செப்பு சுருள்கள், பிளாஸ்டிக் மற்றும் பேட்டரிகளை கூறலாம்.

இந்த பொருட்கள் முறையாக அகற்றப்படாவிட்டால் அது நிச்சயம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும். பேட்டரியில் ஏற்படும் கசிவு உஙகள் டிராயரில் உள்ள மற்ற எலக்ட்ரானிக் பொருட்களைக் கூட சேதப்படுத்தலாம். எனவே உங்களிடம் உடைந்த அல்லது பழைய ஹெட்போன்கள் இருந்தால் அதை மறு சுழற்சி செய்யும் இடங்களில் ஒப்படைத்துவிடலாம்.

பழைய ஹார்ட் டிரைவ்கள் பார்ப்பதற்கு பாதுகாப்பாக இருக்கும். அதில் அலுமினியம் ப்ரோடக்டிவ் பாலிமர்கள், பிளாஸ்டிக் மற்றும் காந்தங்கள் போன்ற பொருட்கள் உள்ளதை மறக்க வேண்டாம்.

மேற்கண்ட பொருட்களை உருவாக்க அதிக அளவு ஆற்றல் செலவாகின்றது மற்றும் அது நம் சுற்றுச்சூழலுக்கு நிறைய சேதத்தை ஏற்படுத்துகின்றது. எனவே பழைய ஹார்டு டிரைவ்கள் இருந்தால் அதை மறு சுழற்சி செய்யவோ சரியான முறையில் அப்புறப்படுத்தவோ தெரிந்தவர்களிடம் அதை ஒப்படைக்கலாம்.

Next Post

ஆங்கிலேயர்கள் திராவிடர் என்பதை "இனம்" என தவறாக குறிப்பிட்டுள்ளனர் – ஆளுநர் கருத்தால் சர்ச்சை…

Wed Nov 16 , 2022
ஆங்கிலேயர்கள் திராவிடர் என்பதை ஒரு இனமாக கருதி தவறாக குறிப்பிட்டுள்ளதாக நிகழ்ச்சி ஒன்றில் தமிழக ஆளுநர் என்.ஆர்.ரவி கருத்து தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையில் ட்ரைபல் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற என்.ஆர்.ரவி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், ’’திராவிடம் என்பது இனம் என்று ஆங்கிலேயரால் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதை தற்போதும் பின்பற்றி வருகின்றனர். இந்தியாவின் […]

You May Like