fbpx

ரூ.2 லட்சம் வரை கடன்..!! குறைந்த வட்டி..!! பெண்களே சூப்பர் வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

தேசிய பிற்படுத்தப்பட்டோர் பிரிவு நிதி, மேம்பாட்டுக் கழகம் (NBCFDC), பெண்களுக்கான புதிய பொற்காலத் திட்டத்தின் கீழ் சிறு வணிகம் செய்வதற்கு குறைந்த வட்டியில் கடன் அளித்து வருகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த பெண்கள் இத்திட்டத்தை கீழ் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, இதுபோன்ற கடன் திட்டங்களில், ஒட்டு மொத்த திட்டத் தொகையில் பயனாளிகள் குறைந்தது 5% முதல் 10% வரை பங்களிப்பு செய்ய வேண்டும். ஆனால், இந்த திட்டத்தில் அத்தகைய நிபந்தனைகள் ஏதுமில்லை.

சுய தொழில் தொடங்க இருக்கும் பெண்கள், இதில் விண்ணப்பித்து வெறும் 5% வட்டியில் ரூ.2 லட்சம் வரை கடன் பெறலாம். இந்த வட்டி விகிதம் மற்ற திட்டங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாகும். கடன் தொகையை, 3 முதல் 8 ஆண்டுகள் வரை திருப்பி செலுத்த அவகாசம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் தொடர்பாக அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், மண்டல மேலாளர் (அல்லது) அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்/ நகர கூட்டுறவு வங்கிகள்/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் அலுவலரை தொடர்பு கொள்ளலாம்

Chella

Next Post

சூப்பர் வேலைவாய்ப்பு..!! ரூ.1,25,000 வரை சம்பளம்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம் உள்ளே..!!

Fri Feb 24 , 2023
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 97 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள்: திட்ட நிர்வாகி (தொழில் மேம்பாடு) – 13, திட்ட நிர்வாக (கணக்கு) – 18, திட்ட நிர்வாகி (திறன் மற்றும் வேலைகள்) -25, இளம் தொழில் வல்லுநர்கள் – 30, மாவட்ட நிர்வாக அதிகாரி – 2, திட்ட நிர்வாக (அக்கவுண்ட்ஸ் மற்றும் அட்மின்) – […]

You May Like