fbpx

அதிக நேரம் ஸ்மார்ட் போன் பார்த்தால் ஆயுள் குறைந்திடும்!….அதிர்ச்சி ரிப்போர்ட்!

அதிக நேரம் ஸ்மார்ட்போன், டிவி, லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை பயன்படுத்தினால் விரைவில் வயதான தோற்றம் வந்துவிடும் என்று ஆராய்ச்சி ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நம் அன்றாட வாழ்வில் ஸ்மார்ட்போன் உபயோகப்படுத்துவோரின் எண்ணிக்கையும், அழைப்புகளின்போது பேசும் கால அளவும் பன்மடங்காக அதிகரித்துள்ளது. வாட்ஸ்அப் உரையாடல் தொடங்கி, செய்திகளை நொடிக்கு நொடி வழங்குவது, வங்கி பணப் பரிவர்த்தனை என அனைத்துக்கும் ஆதாரமாகிவிட்டது செல்போன். இதனை பயன்படுத்தாதவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. ஆனால், இது தரும் ஆபத்தும் அளவிலாதது. இவைகளில் நீல ஒளி வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்து குறித்து பழ ஈக்களை உட்படுத்தி மூத்த எழுத்தாளரும், ஓரிகான் மாநில பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஜாட்விகா கிபுல்டோவிச் ஆய்வு மேற்கொண்டார். நீல ஒளியினால் அவற்றின் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றம் மற்றும் வளர்சிதை மாற்றம் ஆகியவற்றை முதலில் சோதிக்கப்பட்டது. இரண்டு வாரங்கள் சோதனை செய்ததில் ஈக்களில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களின் அளவையும், அதே போன்ற ஈக்களை முழு இருளில் வைத்திருந்த போது ஏற்பட்ட வளர்சிதை மாற்றங்களின் அளவையும் ஒப்பிடப்பட்டது. மேலும், பழ ஈக்களின் உயிரணுக்களில் வளர்சிதை மாற்றங்களின் அளவு நீல ஒளியின் வெளிப்பாட்டிற்குப் பிறகு கணிசமாக வேறுபடுவது கண்டறியப்பட்டது. நீல ஒளி முதுமையை விரைவுபடுத்தும் என்றும், செல்கள் சிறந்த முறையில் செயல்படவில்லை என்றும், இது முன்கூட்டிய உயிரணு இறப்புக்கு வழிவகுக்கும் என்றும் உறுதி செய்யப்பட்டது.

Kokila

Next Post

கொலஸ்ட்ரால், தைராய்டு நோயை குணமாக்க இந்த ஒரு பொருள் போதும்...!

Fri Feb 3 , 2023
நமது சமையலறையில் உள்ள கொத்தமல்லியை வைத்து, இயற்கையான முறையில் கொலஸ்ட்ரால், தைராய்டு பிரச்சனைகளை சரிசெய்யலாம். மேலும், இதில் அடங்கியுள்ள பல்வேறு நன்மைகளை பார்க்கலாம். நமது உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதே, தைராய்டு நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும். தைராய்டு நோய், மனிதர்களின் இதயம், மூளை, கல்லீரல், சிறுநீரகங்கள், வாஸ்குலர் (இரத்த நாளங்கள்) அமைப்புகள், இரத்த அழுத்தம், செரிமானப் பாதை மற்றும் ஹார்மோன்களை உற்பத்தி செய்வதன் மூலம் வளர்சிதை மாற்றத்தின் வளர்ச்சி […]
கொலஸ்ட்ரால், தைராய்டு நோயை குணமாக்க இந்த ஒரு பொருள் போதும்...!

You May Like