fbpx

புளித்த இட்லி மாவை வைத்து மேஜிக்… புதிது போல் ஜொலிக்கும் கிச்சன், பாத்ரூம்கள்…எப்படி தெரியுமா?

புளித்த இட்லி மாவை வைத்து கிச்சன், பாத்ரூம்களில் படிந்துள்ள உப்புகரைகளை எப்படி சுத்தம் செய்து குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சமையலறை, குளியலறை, கழிவறைகளை அடிக்கடி சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டால், உப்பு தண்ணீரில் இருக்கின்ற இடத்தில் வெள்ளை வெள்ளையாக திட்டுக்கள் படிந்து அசுத்தமாகிவிடும். இப்படிப்பட்ட குளியலறையை சுத்தம் செய்வதற்கு நமக்கு நிறைய குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளது. எல்லா குறிப்பையும் நாமும் அடித்து பிடித்து முயற்சி செய்து பார்த்திருப்போம். அதில் குளியல் அறையில் இருக்கும் அழுக்கு கொஞ்சம் போகியும், கொஞ்சம் போகாமலும் இருக்கும் அல்லவா. அதை சுத்தம் செய்ய இன்னொரு ஐடியாவை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

புளித்த இட்லி மாவுடன் சோப் பவுடர் அல்லது லிக்விட் மற்றும் டெட்டால் சேர்த்து எடுத்துக்கொள்ளுங்கள். ஆல்கஹால் தன்மை இருப்பதால் சுத்தம் செய்வதற்கு டெட்டால் பெரிதும் உதவி செய்யும். இதையடுத்து இந்த மூன்று பொருளையும் கலந்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து ஸ்ப்ரே பாட்டலில் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள். பின்பு பாத்ரூம் டைல்ஸ், டாய்லெட் போன்ற இடங்களில் ஸ்ப்ரே பாட்டிலில் உள்ளதை அடித்து சிறிது நேரம் கழித்து பிரஷ் வைத்து தேய்த்து விட்டால் போதும். உப்பு கறை இருந்த இடமே தெரியாமல் காணாமல் போய் விடும். பைப், சிங்க் போன்ற இடங்களில் எல்லாம் தேய்த்து விட்டு அதன் பிறகு பாத்திரம் தேய்க்கும் நார் வைத்து லேசாக தேய்த்துக் கொடுத்தாலே போதும். நல்ல வெண்மையாக மாறி விடும்.

Kokila

Next Post

அபாயம்‌.‌..! கோழிகள் மூலம் வரும் புதிய நோய்..‌.! மூச்சு திணறல் ஏற்பட்ட வாய்ப்பு...! உடனை இந்த தடுப்பூசி போட வேண்டும்...!

Mon Feb 6 , 2023
சேலம்‌ மாவட்டத்தில்‌ கால்நடை பராமரிப்புத்துறையின்‌ சார்பில்‌ கோழிகளில்‌ ஏற்படும்‌ வெள்ளைக்‌ கழிச்சல்‌ நோயினை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒருவார முகாம்‌ நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; இராணிகட்‌ என்னும்‌ வெள்ளைக்கழிச்சல்‌ நோய்‌ கோழிகளில்‌ நச்சுயிரியால்‌ ஏற்படும்‌தொற்று நோய்‌ ஆகும்‌. இந்நோயினால்‌ பாதிக்கப்பட்ட கோழிகளில்‌ வள்ளை அல்லது பச்சை கழிச்சல்‌, மூச்சுத்திணறல்‌, நடுக்கம்‌, வாதம்‌ மற்றும்‌ தீவனம்‌ உட்கொள்ளும்‌ அளவு குறைதல்‌ ஆகியவை ஏற்படும்‌. இந்நோய்‌ பாதித்த […]

You May Like