fbpx

மாத சம்பளம் ரூ.36,000 – 63,000 வரை..!! SBI வங்கியில் சூப்பர் வேலை..!! உடனே இதை செய்யுங்க..!!

இந்தியாவில் முன்னணி வங்கிகள் ஒன்று ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா. இந்த வங்கியில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் Circle Based Officers (CBO) 1,422 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 1,400 பணியிடங்கள் நேரடியானது. 22 பணியிடங்கள் பேக்லாக் செய்யப்பட்டவையாகும்.

மாத சம்பளம் ரூ.36,000 - 63,000 வரை..!! SBI வங்கியில் சூப்பர் வேலை..!! உடனே இதை செய்யுங்க..!!

பணியின் விவரங்கள்…

நிறுவனம்: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI)

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 30.09.2022 அன்று 21-க்கு மேலும், 30-க்கு கீழும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்: ரூ. 36,000 முதல் ரூ.63,840 வரை

தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, ஆங்கிலத் திறனை சோதிக்கும் பேப்பர்/பேனா முறை விரிவான எழுத்துத் தேர்வு/ நேர்காணல் தேர்வு ஆகிய மூன்று நிலையில் தெரிவு முறை இருக்கும்.

அந்தந்த வட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் மொழிகளை பேச எழுத தெரிந்திருக்க வேண்டும். இறுதிப் பட்டியலில் இடம் பெற்ற மொழி அறிவு சோதனை நடைபெறும். இதில், தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் உறுதி செய்யப்படும்.

முன் அனுபவம்: மேலும், 30.09.2022 அன்றைய தேதியில், ஏதேனும் பட்டியலிடப்பட்ட வணிக வங்கியில் (Scheduled Commercial Banks) 2 ஆண்டுகள் பணி செய்த முன் அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி? https://bank.sbi/careers என்ற அதிகாரப்பூர்வ தளத்தின் வாயிலாக வரும் 7-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பத்தாரர்கள் ரூ. 750 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

Chella

Next Post

#Holiday..!! இந்த மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு

Thu Nov 3 , 2022
மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037ஆவது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழா, பெரிய கோவில் வளாகத்தில் இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது. அதன்படி வருகிற 2ஆம் தேதி மங்கள இசையுடன் விழா தொடங்கி கருத்தரங்கம், கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, இன்று (நவ.3) பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம், […]

You May Like