fbpx

வங்கிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட சேமிப்புக் கணக்கு..!! நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது இதுதான்..!!

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி சேமிப்புக் கணக்கு வைத்திருப்போர் அதை பராமரிக்க முடியாத சூழலில், அதை முடிக்க நினைக்கும்போது, பின்பற்ற வேண்டிய வழிகளை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்றைய சூழலில் வர்த்தகம் செய்வோர், தொழில்செய்வோர், உயரிய பணியில் இருப்போர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருப்பது இயல்பு. ஆனால், அந்த கணக்குகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். குறைந்தபட்ச இருப்புத் தொகை, அடிக்கடி பரிமாற்றம், இஎம்ஐக்கு இணைத்திருந்தால், அதில் முறையாக பணம் வைத்திருப்பது போன்றவை அவசியம். ஆனால், வங்கிகளும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்காக புதிய விதிகளை மாதந்தோறும் வெளியிட்டு வருகின்றன. இதனால், கணக்குகளை முறையாகப் பராமரிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட சேமிப்புக் கணக்குகளை முடிப்பது சரியானதாக இருக்கும். அவ்வாறு கணக்கை முடிக்க விரும்பும்போது, பல்வேறு வழிகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.

வங்கிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட சேமிப்புக் கணக்கு..!! நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது இதுதான்..!!

கணக்கை முடிக்கும் முன் நினைவில் கொள்ள வேண்டியவை..!!

* ஒருமுறை கணக்கை முடித்துவிட்டால், மீண்டும் கணக்கு ஓபன் செய்ய முடியாது.

* கணக்கை முடிக்க நடவடிக்கை எடுக்கும்போது, உங்கள் பேலன்ஸ் பூஜ்ஜியமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* வங்கி்க்கு ஏதேனும் கட்டணம் செலுத்திய வேண்டியது இருந்தால், அதை விசாரித்து முறைப்படி செலுத்த வேண்டும்.

* கணக்கு முடிக்கும் முன், உங்கள் சேமிப்புக் கணக்கு குறித்த முழுமையான ஸ்டேட்மென்ட் பெற்றுக்கொள்வது அவசியம். பிற்காலத்தில் செலவுகள் குறித்து சரிபார்க்க உதவும்.

வங்கிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட சேமிப்புக் கணக்கு..!! நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது இதுதான்..!!

வங்கிக் கணக்குகளை ஆன்லைனில் முடிக்க முடியாது. அதற்கு வங்கிக்கு நேரடியாகச் செல்லுதல் அவசியமாகும். எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களோ அந்த வங்கிக்கு நேரடியாகச் சென்று, வங்கிக் கணக்கு முடிப்பது குறித்து தெரிவிக்க வேண்டும். வங்கிக் கணக்கு முடிக்க வேண்டும் என்று விரும்பினால் அனைத்து வங்கிகளும் கணக்கு முடிக்கும் விண்ணப்பத்தை வழங்கும். இந்த விண்ணப்பத்தை வங்கியின் இணைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் அல்லது நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம். ஜாயின்ட் அக்கவுண்டாக இருந்தால், அனைத்து கணக்குதாரர்களின் ஒப்புதல் கடிதம் பெற்றுவருவது அவசியம்.

வங்கியில் கணக்கு முடிக்கும்போது என்னென்ன விவரங்களைக் குறிப்பிட வேண்டும்?

1.    கணக்கு வைத்திருப்போரின் பெயர்

2.    வங்கிக்கணக்கு எண்

3.    செல்போன் எண்

4.    கணக்கு வைத்திருப்போரின் கையொப்பம்

5.    கணக்கை முடிக்க காரணம்

ஆவணங்கள்…

1.    காசோலை புத்தகம்

2.    வங்கிக்கணக்குப் புத்தகம்

3.    டெபிட் கார்டு

4.    அடையாள அட்டை நகல்

கணக்கு முடிக்க கட்டணம்

சில வங்கிகள் சேமிப்புக்கணக்கு திறக்கப்பட்ட ஓர் ஆண்டுக்குள் கணக்கு முடித்தால் அதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கின்றன. அந்த வகையில், கணக்கு முடிக்கும்போது கட்டணம் செலுத்த வேண்டும்.

Chella

Next Post

’சுற்றுலாவில் நம்பர் 1’..! தாஜ்மஹாலை துவம்சம் செய்த மாமல்லபுரம்..!! இதுதான் காரணம்..!!

Tue Oct 4 , 2022
வெளிநாட்டுப் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் மாமல்லபுரம், தாஜ்மஹாலைத் தோற்கடித்துள்ளது. 2021-22ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் 65.41% பங்களிப்பைக் கொண்டுள்ளன என்றும் சுற்றுலா அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாக வகைப்படுத்தப்பட்ட மாமல்லபுரம், வெளிநாட்டுப் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் தாஜ்மஹாலைத் தோற்கடித்துள்ளது. இந்திய சுற்றுலாப் புள்ளிவிவரம் 2022 அறிக்கையின்படி, ”2021-22ஆம் ஆண்டில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்திற்கு […]
’சுற்றுலாவில் நம்பர் 1’..! தாஜ்மஹாலை துவம்சம் செய்த மாமல்லபுரம்..!! இதுதான் காரணம்..!!

You May Like