fbpx

மர்மம் நிறைந்த கிராமங்கள்..!! அட நம்ம தமிழ்நாட்டுல கூட இருக்கா..? ரொம்ப விசித்திரமா இருக்கே..!!

நம்மில் பலருக்கு பயணம் செய்வதும், பல இடங்களை சுற்றிப்பார்ப்பது பிடிக்கும். இன்னும் சிலர் கிராமங்களை விரும்புவார்கள். ஏனென்றால், இந்த இயந்திர வாழ்க்கையில் இருந்து சற்று தள்ளி அமைதியாகவும், நிம்மதியாகவும் இருக்க விரும்புவார்கள். அப்படி கிராமங்களை நீங்க அதிகமாக விரும்புபவராக இருந்தால், உங்களுக்கு சில கிராமங்கள் பற்றி கூறுகிறோம். இவை அனைத்தும் மர்மங்கள் நிறைந்தது.

மேட்டூர், கர்நாடகா : கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கிராமம் சமஸ்கிரதம் பேசும் கிராமம் ஆகும். கர்நாடகாவில் அலுவல் மொழி கன்னடமாக இருந்த போதிலும் இங்கு வசிக்கும் மக்கள் சமஸ்கிருத மொழியையே பேசுகின்றனர்.

லாங்வா, நாகாலாந்து : நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த லாங்கா இந்தியா – மியான்மருக்கும் இடையிலான புவியியல் எல்லை கோட்டில் அமைந்துள்ளது. இதனால், இந்த கிராம மக்கள் இரட்டை குடியுரிமை பெற்றுள்ளனர்.

பர்வான் கலா, பீகார் : பீகார் மாநிலம் கைமூர் மலையில் அமைந்துள்ளது இந்த பர்வான் கிராமம். இந்த கிராமத்தினர் திருமணத்தை வெறுக்கிறார்கள். அதாவது தேவையற்ற காரணங்களுக்காக திருமணம் செய்வதில்லை என உறுதியோடு வாழும் மக்களை கொண்ட ஒரு கிராமம் ஆகும்.

ஷானி ஷிங்னாபூர், மகாராஷ்டிரா : மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஷானி ஷிங்னாபூர் என்ற கிராமம். இந்த கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு கதவே கிடையாது. ஆம்..! இங்கு வாழும் மக்கள் தங்கள் உடமைகளை இறைவன் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

ஹிவ்றேபஜர், மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் பகுதியில் அமைந்துள்ள இந்த ஹிவாரே, கோடீஸ்வரர்களின் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கிராமத்தில் சுமார் 50 கோடீஸ்வர குடும்பம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷெட்பால், மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள இந்த ஷெட்பால் கிராமத்தில் கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்புகளை அதிகம் காணலாம். அதேநேரம், இந்த பாம்புகளுடன் இங்குள்ள குழந்தைகள் பயமின்றி விளையாடுகின்றனர்.

கோனோம நாகாலாந்து : நாகாலாந்தில் அமைந்துள்ள இந்த கோனோம, இந்தியாவின் மிக முக்கிய பசுமை கிராமம் ஆகும். இங்கு வாழும் மக்கள் காடுகளை பாதுகாக்கும் பொறுப்புகளை ஏற்று, இயற்கையை காத்து வருகின்றனர்.

வெள்ளகவி, தமிழ்நாடு : திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் வீடுகளை விட கோவில்களே அதிகம் உள்ளன. இந்த காரணமாக இங்கு வசிக்கும் மக்கள் காலணிகளை அணிய மறுக்கின்றனர்.

Chella

Next Post

காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி..!! ஆத்திரத்தில் சரமாரியாக குத்திய இளைஞர்..!! சென்னையில் பயங்கரம்..!!

Wed Sep 20 , 2023
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் கலைஞர் நகர் பகுதியில் வசித்து வருபவர் கீதா (16). இவர், வண்டலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாமாண்டு படித்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற மாணவி, மேடவாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வரும்போது அவரை பின் தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர் அவரை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதனைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் கூச்சலிடவே அந்த இளைஞர் […]

You May Like