பலரது வீடுகளில், எப்போதும் ஈக்கள் சுற்றிக் கொண்டே இருக்கும். ஈக்கள் நம்மை கொசுக்கள் போன்று கடிக்காது என்றாலும், அதனால் நமக்கு தொந்தரவாக இருக்கும். ஈக்கள் ஆபத்தான பூச்சி இல்லை என்றாலும், பல வகையான நோய் தொற்றுகள் பரவ இவைகள் தான் காரணமாக உள்ளது. ஆம், ஈக்கள் மொய்க்கும் உணவுகளை சாப்பிடுவதால், டைபாய்டு காய்ச்சல், வயிற்றுப் போக்கு, புட் பாய்சன் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். கொசுக்களை விரட்ட மருந்து இருந்தாலும், ஈக்களை விரட்ட மருந்துகள் இல்லை. ஆனால், நீங்கள் வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே ஈக்களை உங்களின் வீடுகளில் இருந்து விரட்டி விடலாம்.
ஆம், நீங்கள் உப்பு நீரைப் பயன்படுத்தியே ஈக்களை விரட்டலாம். இதற்க்கு முதலில், ஒரு கிளாஸ் சுத்தமான தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்றாகக் கரைத்து விடுங்கள். இப்போது இந்த உப்பு நீர் கரைசலை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, ஈக்கள் இருக்கும் இடங்களில் ஸ்பிரே செய்தால் ஈக்களின் வரத்து குறைந்து விடும். உப்பு தண்ணீருக்கு பதில், புதினா அல்லது துளசியை பேஸ்ட்டாக அரைத்து அதனை தண்ணீரில் நன்றாகக் கலக்கி இப்படி ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து, ஈ உள்ள இடங்களில் ஸ்ப்ரே செய்தாலே ஈக்கள் ஓடிவிடும்.
ஒரு வேலை உங்கள் வீட்டில் அதிக அளவில் ஈ இருந்தால், நீங்கள் வினிகரைப் பயன்படுத்தலாம். இதற்க்கு முதலில் ஒரு கிண்ணத்தில் சிறிதளவு வினிகரை ஊற்றி, சிறிய துளையுடைய மூடியால் அதனை மூடி வைக்கவும். வினிகரின் வாசனைக்கு ஈக்கள் இழுக்கப்பட்டு, வினிகர் நிறைந்த கிண்ணத்தில் விழுந்து இறந்து விடும். இதனை நீங்கள் கிச்சனில் வைப்பதால் பழத்தில் வரும் ஈக்கள் அழிந்து விடும்.
நமது பாரம்பரியத்தின் படி, வெள்ளை நிற எல்இடி விளக்குகளுக்கு பதில், மஞ்சள் நிற விளக்குகளை பயன்படுத்தினால் ஈக்களை சுலபமாக விரட்டி விடலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், நீல நிற ஒளி ஈக்களுக்கு பிடிக்கும் என்பதால், நீங்கள் வீட்டின் வெளிப்பகுதிகளில் நீல நிற விளக்குகளை ஒளிர விடலாம். இதனால் உங்களின் வீடுகளின் உள்ளே உள்ள ஈக்களை விரட்ட முடியும்.
ஈரப்பதம் அதிகம் உள்ள சமையலறை, குளியலறை போன்ற இடங்களில் உப்பு மற்றும் மஞ்சள் தூளை ஒன்றாகக் கலந்து அதனை ஈக்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் தூவவும். இதனால் ஈரப்பதத்தால் ஈக்கள் சேர்வது குறையும்.