இந்தியன் ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பணியின் விவரங்கள்:
பணி நிலைகள் | பணியிடங்கள் | சம்பளம் |
‘பிரிவு – சி’நிலை 5 /நிலை 4 | 5 | ரூ.29,200-92,300/- அல்லது ரூ.25,500-81,100/- |
‘பிரிவு – சி’நிலை 2 /நிலை 3 | 16 | ரூ.21,700-69,100/- அல்லது ரூ.19,900-63,200/- |
விளையாட்டு பிரிவுகள்:
குத்துச்சண்டை, கைப்பந்து, கோ-கோ, குண்டு எரித்தல், கூடைப்பந்து, கிரிக்கெட், ஓட்டப்பந்தயம், ஈட்டி எரித்தல், கிராஸ் கண்டிரி மற்றும் எடை தூக்குதல்.
வயது வரம்பு: 18 இல் இருந்து 25ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
பணி | கல்வித்தகுதி |
நிலை 5 சம்பளப் பணி | ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. |
நிலை 4 சம்பளப் பணி | பட்டப்படிப்பு அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தட்டச்சு சான்றிதழ். |
நிலை 2 மற்றும் நிலை 3 சம்பளப் பணி | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்குத் தகுதியானவர்கள் ட்ரயல் தேர்வு மற்றும் கல்வி மற்றும் விளையாட்டுத் துறையில் செய்த சாதனை போன்றவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு https://secr.indianrailways.gov.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன்பு தேவையான தகுதி மற்றும் விதிமுறைகளை முறையே படித்து பின்னர் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: https://nitplrrc.com/RRC_BSP_SPRT2022/
முக்கிய நாட்கள் :
நிகழ்வுகள் | தேதிகள் |
ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கிய நாள் | 26.11.2022 |
ஆன்லைனில் விண்ணப்பம் முடியும் நாள் | 25.12.2022 |
திறன் தேர்வு நடைபெறும் மாதம் | டிசம்பர் 22 அல்லது ஜனவரி 2023 |