fbpx

எத்தனை ஆதார் கார்டு இருந்தாலும் ஒரு மொபைல் நம்பர் போதும்..!! மக்களே இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..?

ஆதார் கார்டு என்பது தற்போது நாட்டில் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு ஆதார் கார்டு முக்கியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல துறைகளில் ஆதாரை இணைக்க வேண்டியதும் அவசியமாகிறது. மத்திய, மாநில அரசு சேவைகளை பெற ஆதார் முக்கியம் ஆகி உள்ளது. இதற்கிடையே, ஆதார் தொடர்பான மோசடிகளைத் தடுக்க, 10 ஆண்டுகளாக ஆதார் வைத்திருப்பவர்களை, சமீபத்திய தகவலுடன் விவரங்களைப் புதுப்பிக்குமாறு UIDAI வலியுறுத்தி வருகிறது.

10 ஆண்டுகளாக ஆதார் கார்டை அப்டேட் செய்யாதவர்கள், விலாசம் மாறியவர்கள், ஆதாரில் தவறான விவரங்கள் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும். இணையதளம் மூலம் இலவசமாக திருத்திக் கொள்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 14 வரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், ஒரு மொபைல் நம்பரில் எத்தனை ஆதார் கார்டுகளை இணைக்க முடியும் என்பது குறித்த சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.

அதாவது, எந்த குடும்ப உறுப்பினரின் ஆதார் அட்டையை வேண்டுமானாலும் ஒரே மொபைல் நம்பருடன் இணைக்க முடியும். ஒரே மொபைல் நம்பருடன் பல ஆதார் கார்டுகளை இணைக்க முடியும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறியுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் தங்கள் ஆதார் இணைப்பிற்கு ஒரு முக்கிய உறுப்பினரின் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ஆதார் கார்டில் வந்த அதிரடி கட்டுப்பாடு..!! இனி நீங்க நினைக்குற மாதிரி செய்ய முடியாது..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

English Summary

Any family member’s Aadhaar card can be linked to the same mobile number.

Chella

Next Post

விவசாயிகளே குட்நியூஸ்!. ரூ.2,481 கோடி வேளாண்மை திட்டங்களுக்கு க்ரீன் சிக்னல்!. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Tue Nov 26 , 2024
Good news farmers! Green signal for these projects!. Central Cabinet approved!

You May Like