இனிமேல் வரி செலுத்துவோர் சிகிச்சைக்காக பெறும் தொகைக்கு வருமான வரியில் விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி என்பது வரி வரம்புக்குள் வரக்கூடிய அனைத்து இந்திய குடிமக்களும் செலுத்த வேண்டிய வரி ஆகும். நடுத்தர வர்க்கம் முதல் மேல்தட்டு மக்கள் வரை அனைவருக்கும் இவ்வரி முக்கியத்துவம் வாய்ந்தது. இப்போது இதுகுறித்த ஒரு முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. வருமான வரி செலுத்துவோருக்கு அரசு பெரிய நிவாரணமானது கொடுக்கப்போகிறது. அதாவது, வரி செலுத்துவோருக்கு விலக்கு அளிக்கும் அடிப்படையில் பெரிய அளவில் நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான புதிய உத்தரவை நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. வரி செலுத்துவோருக்கு பெரும் நிம்மதியை அளித்து வருமான வரித்துறை அண்மையில் வரிவிலக்கு அளித்து புது உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த புது உத்தரவின் படி இனிமேல் வரி செலுத்துவோர் சிகிச்சைக்காக பெறும் தொகைக்கு வருமான வரியில் விலக்கு அளிக்கப்படும். ஆகவே, இத்தொகைக்கு நீங்கள் வரிசெலுத்த வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.