fbpx

Non veg : குழந்தைகளுக்கு அவசியம் கொடுக்க வேண்டிய அசைவ உணவுகள்…!

குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய அசைவ உணவுகள் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம். பொதுவாகவே நாம் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் மிகவும் கவனமாக இருப்போம். அதிலும் அசைவம் என்று வந்துவிட்டால் என்ன மாதிரியான உணவு கொடுப்பது என்று குழப்பத்தில் இருப்போம். அசைவ உணவுகளான சிக்கன்,மட்டன்,மீன் ஆகியவற்றில் அதிகமான புரதம், தாதுக்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளதால்,இவை மிகவும் ஏற்றவையாகும்.

சிக்கன்: சிக்கனில் அதிகளவில் புரதம் நிறைந்துள்ளது. குழந்தைகள் வலுவாகவும், உயரமாகவும் வளருவதற்கு தேவையான அமினோ அமிலங்கள் சிக்கனில் இருக்கின்றது.

மட்டன்: மட்டனை அடிக்கடி எடுத்துக்கொள்ளக் கூடாது,ஏனெனில் இதில் அதிகப்படியான நிறைவுற்ற கொழுப்பு இருப்பதால், குறைந்த அளவு சாப்பிடுவது நல்லது. இதனால் பிற்காலத்தில் உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மீன்: மீன் வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு உணவாகும். மீனில் அதிகமான புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், ஒமேகா 3 இருக்கின்றன. ஒமேகா 3 இதயத்திற்கு ஆரோக்கியத்தை அளிப்பதுடன், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.மேலும் குழந்தைகளின் மூளை வளர்சிக்கும், கண்ணிற்கும் மிகவும் நல்லது. எலும்புகள் வலுப்பெறவும், புற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் மீன் உதவுகின்றது. வாரத்திற்கு 3 முறை மீன் சாப்பிட்டு வந்தால் பெருங்குடல், கருப்பை, தொண்டை மற்றும் மார்பகப் போன்ற புற்றுநோய்கள் வராமல் பாதுகாக்கின்றது.

Maha

Next Post

இஸ்ரேல் -ஈரான் மோதல் ;உதவி எண்ணை அறிவித்த இந்திய தூதரகம்!

Sun Apr 14 , 2024
ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அவசர உதவி எண்ணை வெளியிட்டுள்ளது. சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனால் இஸ்ரேல் மீது ஈரான் கடும் கோபத்தில் உள்ளது. இந்த தாக்குதலையடுத்து எந்நேரமும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் […]

You May Like