நோய் தொற்றுகளில் இருந்து நம்மை எப்போதும் பாதுகாத்துக் கொள்ள தனிப்பட்ட சுகாதாரத்தை கவனித்துக்கொள்வது மிக அவசியம். அந்த விஷயத்தில் குளிப்பதற்கு பயன்படுத்தும் டவல்களை மறந்து விடுகிறோம். நாம் தினமும் குளிக்கும்போது, உடலைத் துடைத்து உலர்த்துவதற்குப் பயன்படுத்தப்படும் துணி அடிக்கடி துவைக்கப்படுவதில்லை.
டவல்களில் நாம் பார்க்க முடியாத பல்வேறு நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. இது நீண்ட காலத்திற்கு தொற்றுநோய்களை ஏற்படுத்தும். எனவே, அவற்றை அடிக்கடி துவைப்பது மிகவும் முக்கியமாகும். பொதுவாக குளிக்க பயன்படுத்தும் டவல்கள் காட்டன் மைக்ரோஃபைபரால் ஆனது. இது அதிகளவு வெப்பத்தை உறிஞ்சும் திறன் கொண்டிருப்பதால், அதிகளவு கிருமிகள் தங்க வாய்ப்பிருக்கிறது. மேலும், சருமத்தில் உள்ள இறந்த செல்களும் இதில் தொற்றிக் கொள்கின்றன. எனவே, எப்படி டவலை துவைத்து சுத்தமாக வைத்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கும் கருத்துகளைக் பார்க்கலாம்.
எப்போது டவலை துவைக்க வேண்டும்..?
சரும மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் அளித்த தகவலின்படி, 3 அல்லது 4 முறை டவலை பயன்படுத்தியதும், அதனை துவைத்து நிழலில் காயவைத்து பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாம். உடற்பயிற்சி மேற்கொள்ளும் நபர்கள் பயன்படுத்தும் டவல்களை தினமும் துவைக்க வேண்டுமாம். இதனால் பல நோய் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
யாரெல்லாம் டவலை அவ்வப்போது துவைக்க வேண்டும்..?
* உடலில் சுரக்கும் திரவம், அதாவது அது வேர்வையாகக் கூட இருக்கலாம். இப்படியான சூழலில் நீங்கள் டவலை பயன்படுத்தினால், உடனடியாக அதை துவைத்து லேசான வெயிலில் காயவிடவும்.
* உடற்பயிற்சி கூடத்தில் பயன்படுத்தும் டவலில் அதிக அழுக்கு சேர்ந்திருக்கும். இதனால், அதனை தினமும் துவைப்பது தான் சிறந்த வழியாகக் கூறப்படுகிறது.
* எப்போது டவலை ஈரப்பதம் இல்லாத இடத்தில் வைக்க வேண்டும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்
* உங்களுக்கு ஏதேனும் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால், தினமும் டவலை துவைத்து பயன்படுத்துவது நல்லது.
டவலை துவைத்து பயன்படுத்தவில்லை என்றால் என்ன ஆகும்?
அழுக்குத் துண்டுகள் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ்கள் போன்ற கிருமிகளைப் பரப்புகின்றன. அவை மின்னல் வேகத்தில் பரவுகின்றன. இதனால் தான் தோல் நோய்த்தொற்று ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஸ்டாஃபிலோகாக்கஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் Staph தொற்றுகள், பொதுவாக ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு தோலிலோ அல்லது மூக்கிலோ காணப்படுகின்றன. மேலும் அவை உங்கள் ரத்த ஓட்டம், மூட்டுகள், எலும்புகள் ஆகியவற்றில் நுழைந்து உங்கள் உடலில் ஆழமாக ஊடுருவினால் அவை நுரையீரல், இதயத்திற்கு ஆபத்தானவையாக மாறுகிறது. எனவே, நிபுணர்கள் குறிப்பாக மற்றவர்கள் அல்லது நோய்வாய்ப்பட்டவர்களுடன் துண்டுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று பரிந்துரைக்கின்றனர்.
Read More : மனித இனமே அழிந்துவிட்டால் பூமியை யார் ஆட்சி செய்வார் தெரியுமா..? இந்த 8 கால் உயிரினம் தானாம்..!!