fbpx

’இனி போலி மருந்து, மாத்திரைகளை ஈசியா கண்டுபிடிக்கலாம்’..!! எப்படி தெரியுமா..?

போலி மருந்துகளைச் சரிபார்க்க கியூஆர் கோடு விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

நாம் சாப்பிடும் மருந்து, மாத்திரைகளில் உள்ள அபாயத்தைக் குறைக்கும் வகையில், தரமற்ற மற்றும் போலியான பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க, சிறந்த மருந்து உற்பத்தியாளர்களுக்கான ‘ட்ராக் அண்ட் ட்ரேஸ்’ முறையை அரசாங்கம் விரைவில் தொடங்க உள்ளது. அந்த வகையில், சுமார் 300 முன்னணி மருந்து தயாரிப்பாளர்கள் முதன்மை பேக்கேஜிங் லேபிள்களில் பார்கோடுகள் அல்லது கியூஆர் கோடுகளை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

’இனி போலி மருந்து, மாத்திரைகளை ஈசியா கண்டுபிடிக்கலாம்’..!! எப்படி தெரியுமா..?

இந்த கியூஆர் கோடுகளை பயன்படுத்தி மருந்தின் சரியான மற்றும் பொதுவான பெயர், பிராண்ட் பெயர், உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி, உற்பத்தி தேதி, காலாவதி தேதி மற்றும் உற்பத்தி உரிம எண் என அனைத்தையும் நம்மால் அறிய முடியும். மேலும், உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, உலகம் முழுவதும் உள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் 10 சதவீத மருத்துவப் பொருட்கள் தரமற்றவை அல்லது போலியானவை என தெரியவந்துள்ளது.

Chella

Next Post

’போராட்டத்தில் குதித்த சுங்கச்சாவடி ஊழியர்கள்’..!! ’கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்’..!!

Mon Oct 3 , 2022
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், வாகனங்கள் கட்டணம் இன்றி செல்கிறது. நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி மையங்களில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், சுங்கச்சாவடி ஒப்பந்த நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஊழியர்களாக பணியாற்றி வந்த 28 பேர் பணி ஒப்பந்தம் முடிந்து விட்டதாக கூறி, பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், வசூல் மையங்களை […]

You May Like