fbpx

சாலையில் செல்லும்போது வாகனங்களில் டீசல் காலியானால் அபராதம்..!! எந்த நாட்டில் தெரியுமா..?

ஜெர்மனி நெடுஞ்சாலையில் செல்லும்போது வாகனங்களில் டீசல் காலியானால் அபராதம் அல்லது தண்டனை வழங்கப்படுகிறது.

ஜெர்மனி நாட்டை பற்றி நாம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். ஜெர்மனியில் நடைபெற்ற சர்வாதிகாரி ஹிட்லர் ஆட்சி தான் இரண்டாம் உலகப்போருக்கு காரணமாக அமைந்தது. 2-ம் உலகப்போருக்கு பிறகு ஜெர்மனி முழுவதுமே திவாலாகி விட்டது என்றே சொல்லலாம். எனினும் தற்போது உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஜெர்மனியும் இடம்பெற்றுள்ளது. பொறியியல் துறையில் உலகிலேயே சிறந்து விளங்கும் நாடாகவும் ஜெர்மனி திகழ்கிறது. இவை தவிர ஜெர்மனியை பற்றி ஆச்சர்யப்படும் அளவுக்கு பல சுவாரஸ்யமான உண்மைகள் இருக்கின்றன.

சாலையில் செல்லும்போது வாகனங்களில் டீசல் காலியானால் அபராதம்..!! எந்த நாட்டில் தெரியுமா..?

ஜெர்மனியில் உள்ள நெடுஞ்சாலைகளில் நீங்கள் அதிவேகமாக காரை ஓட்டி செல்லலாம். ஆனால், செல்லும் வழியில் வாகனங்களில் டீசல் தீர்ந்துவிட்டால், அது ஜெர்மனியில் குற்றச்செயலாகும். அதற்காக நீங்கள் அபராதம் செலுத்த வேண்டும் அல்லது உங்களுக்கு தண்டனை கிடைக்கும். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பிறந்தநாளுக்கு முன்கூட்டியே வாழ்த்து சொல்லும் பழக்கம் உள்ளது. ஆனால், ஜெர்மனியில் அது துரதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. எனவே, முன்கூட்டியே வாழ்த்து தெரிவிக்காமல், பிறந்தநாளில் மட்டுமே வாழ்த்து தெரிவிப்பார்கள். பொதுவாக நாம் தொலைபேசியில் யாரையாவது அழைத்தாலோ அல்லது நமக்கு வரும் அழைப்புகளை எடுத்தாலோ முதலில் ‘ஹலோ’ என்று தான் பேசுவோம். ஆனால், ஜெர்மனியில் ஹலோ என்பதற்கு பதிலாக, தங்கள் பெயரை நேரடியாக சொல்லி பேச தொடங்குவார்கள்.

உலகின் முதல் நாளிதழ் ஜெர்மனியில் தான் அச்சிடப்பட்டது. ஆம். கி.,பி 1663ஆம் ஆண்டு உலகின் முதல் நாளிதழ் அங்கு தொடங்கப்பட்டது. அதிக புத்தகங்களை அச்சிடும் நாடுகள் பட்டியலில் ஜெர்மனி இடம்பெற்றுள்ளது. அந்நாட்டில் ஆண்டிற்கு சுமார் 94,000 புத்தங்கள் அச்சிடப்படுகின்றன. உலகிலேயே அதிக உயிரியல் பூங்காக்களை கொண்ட நாடாகவும் ஜெர்மனி உள்ளது. இவை தவிர உலகின் மிகப்பெரிய தேவாலயம் ஜெர்மனியில் தான் உள்ளது. சுமார் 530 உயரம் கொண்ட இந்த தேவாலயம் ‘அல்ம் மின்ஸ்டர்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இதில் சுமார் 2,000 பேர் வசதியாக அமர முடியும் அளவுக்கு மிகப்பெரிய தேவாலயம் ஆகும்.

Chella

Next Post

மதியம் சாப்பிட்டவுடன் செம தூக்கம் வருதா..? அப்படி தூங்குனா நல்லதா..? கெட்டதா..? விவரம் உள்ளே..!!

Sat Jan 28 , 2023
மதியம் சாப்பிட்டு முடித்ததும் அரைமணி நேரம் உறங்குவது உடல் நலத்திற்கு நல்லது என்று இங்கிலாந்தின் ப்ரிஸ்டோல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மதியம் சாப்பிட்டு முடித்ததும் நம்மில் பலருக்கு கிறக்கம் ஏற்பட்டு உறக்கம் வருவது வழக்கம். சிறிது நேரம் தூங்கினால் நன்றாக இருக்கும். ஆனால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களில் அப்படி தூங்க முடியாது. அதனால் அருகில் உள்ளவர்களிடம் அரட்டை அடிப்பது, செல்போனில் கேம் விளையாடுவது என்று தூங்காமல் கண்களுக்கு கடிவாளம் போடுவோம். […]

You May Like