fbpx

நிலத்திற்கு அடியில் வாழும் மக்கள்..!! என்ன காரணம் தெரியுமா..? சுவாரஸ்ய தகவல்..!!

பதுங்கு குழிகள், ரகசிய அறைகள், சுரங்க பாதைகள், நிலத்தடி அறைகள் பற்றி எல்லாம் நாம் கேள்விப்பட்டிருப்போம் செய்திகளிலும் பார்த்திருப்போம். போர் அல்லது ஆபத்து என்று வரும்போது ராஜாக்கள் முதல் சாதாரண மக்கள் வரை இந்த நிலத்தடி பாதைகளிலோ, அறைகளிலோ தங்குவார்கள். ஆனால், ஒரு தென்னாபிரிக்க நகரமே நிலத்திற்குள் தான் இருக்கிறது என்றால், உங்களால் நம்ம முடிகிறதா..? வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் அரபு மொழி பேசும் பெர்பர் இன மக்கள் வாழும் சிறிய நகரம் ஒன்று உள்ளது. அதற்கு மட்மதா என்று பெயர். தெற்கு துனிசியாவின் டிஜெபல் தஹார் பிராந்தியத்தின் வறண்ட பள்ளத்தாக்குகளில் அமைந்துள்ள நிலப்பரப்பில் இந்த நகரம் அமைந்துள்ளது.

ஒவ்வொரு ஸ்டார் வார்ஸ் (Star Wars) ரசிகருக்கும் லூக் ஸ்கைவால்கரின் (Luke Skywalker) வீட்டின் இருப்பிடம் பற்றி கொஞ்சம் தெரியும். அந்த இருப்பிடங்கள் எல்லாம் இந்த துனிசியாவின் மட்மதா நகரத்தில் தான் படப்பிடிப்பு செய்யப்பட்டது. ஆனால், இப்போது இந்த பாரம்பரிய கட்டமைப்புகள் கொண்ட நகரத்தில் வசிக்கும் மக்கள் வெளியேறுவதால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. பெர்பர் இன மக்கள் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழில்களையே செய்து வருகின்றனர். அவர்கள் அரேபியாவில் இருந்து துனிசியாவுக்கு குடிபெயர்ந்த போது மட்மதாவில் உள்ள வறண்ட நிலத்தில் வெப்பத்தில் வாழ முடியாத காரணத்தால் இங்குள்ள நிலத்தின் அடியில் மண்ணை தோண்டி வாழத் தொடங்கினர்.

எளிய கைக்கருவிகளுடன் தோண்டக்கூடிய அளவுக்கு மென்மையாக இருக்கும் மணற்கல்லில் முதலில் ஆழமான வட்டக் குழியைத் தோண்டி வீடுகள் கட்டுகின்றனர். குகையின் விளிம்புகளைச் சுற்றி தோண்டப்பட்டு, நிலத்தடி அறைகளை உருவாக்கி வீட்டின் அமைப்பை கொண்டு வருகின்றனர். இந்த தனித்துவமான ட்ரோக்ளோடைட் கட்டுமானமானது பகலில் வெப்பத்திலிருந்து தப்பிக்க உதவுகிறது. ஆனால், 1960-களில் பெய்த கனமழை, வெள்ளத்தில் நிலத்தடி குடியிருப்புகள் கொஞ்சம் சேதமடைந்துள்ளது. இருப்பினும் இன்றைய சூழலில் இந்த வீடுகள் அனைத்து நவீன வசதிகளுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வீட்டில் ஒவ்வொரு கொல்லைப்புறமும் ஒரு முற்றத்துடன் இணைகிறது. நிலத்தடி வீட்டிற்கு இந்த முற்றம் மிக முக்கியமானது. ஏனெனில், அது தான் இந்த வீட்டிற்கு வெளியில் இருந்து காற்றைக் கொண்டுவருகிறது. குடும்ப உறுப்பினர்கள் வேலைகளைச் செய்வதற்கும் சமூக ரீதியாக இணைவதற்கும் இது ஒரு மைய இடமாக விளங்குகிறது. மட்மதா சுரங்க வீடுகளில் இருந்து சுவரில் பாதிக்கப்பட்ட கால் வைக்க படி போன்ற அமைப்பை கொண்டு தாவி நிலப்பரப்பை அடைகின்றனர். துனிசியா ஜனாதிபதி ஹபீப் போர்குய்பா நாட்டை நவீனமயமாக்க முயன்ற போது இந்த நகரமும் அங்குள்ள பெர்பர் மக்களும் பல புதிய வசதிகளை பெற்றனர்.

Chella

Next Post

ஓரினச்சேர்க்கை திருமண அங்கீகாரம்...! இந்திய பார் கவுன்சில் கொண்டு வந்த தீர்மானம்...!

Mon Apr 24 , 2023
ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதை எதிர்த்து இந்திய பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய மனுக்கள் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் நரசிம்மா, பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. வழக்கில் மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஒரே பாலின திருமணத்தை நாட்டின் நெறிமுறை மற்றும் சமூக ஒழுக்கமாக ஏற்றுக் […]

You May Like