fbpx

PM-Kisan..!! விவசாயிகளுக்கு 13-வது தவணைத் தொகை..!! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!!

நாடாளுமன்றத்தில் பி.எம். கிசான் (PM-Kisan) திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், ”கடந்த ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதம் வரை வழங்கப்பட்ட பிஎம் கிசான் திட்டத்தின் 12-வது தவணையில் பயனாளிகளின் எண்ணிக்கை 8.42 கோடியாக உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளார். இந்நிலையில், பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 13-வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.

PM-Kisan..!! விவசாயிகளுக்கு 13-வது தவணைத் தொகை..!! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!!

ஒவ்வொரு தவணையின் போதும் விவசாயிகளுக்கு ரூ.2,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. மேலும், 13-வது தவணை தொகையானது ஜனவரி மாதத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், பி.எம். கிசான் திட்டத்தில் சில வசதி படைத்தவர்களும் பயன்பெறுவதால் அவர்களை கண்டறிந்து திட்டத்தில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Chella

Next Post

போலி கம்பெனி..!! வங்கிகளுக்கு ரூ.43.76 லட்சம் இழப்பு ஏற்படுத்திய இருவர்..!! விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!!

Wed Dec 14 , 2022
கோவையில் தங்கள் பெயரில் போலியான கம்பெனிகளை பதிவு செய்து, அதன் பெயரில் வங்கிகளுக்கு சுமார் ரூ.43.76 லட்சம் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்தினபுரியைச் சேர்ந்த மனோகரன், டாடாபாத்தைச் சேர்ந்த தேவராஜ் ஆகியோர் தங்களின் பெயரில் போலியான கம்பெனிகளை பதிவு செய்துள்ளனர். அதன் பெயரில் வங்கிக் கணக்குகளையும் தொடங்கி வங்கியில் இருந்து POS Machine-களையும் பெற்றுள்ளனர். பின்னர் அதன் மூலம் வெளிநாட்டு Credit Card-களை (Skimmed Cards) […]
போலி கம்பெனி..!! வங்கிகளுக்கு ரூ.43.76 லட்சம் இழப்பு ஏற்படுத்திய இருவர்..!! விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!!

You May Like