கொலஸ்ட்ரால் என்பது நமது ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை. இதனால், இதன் ஆபத்தும் பலருக்கு புரிவதில்லை. கண்களில் எரிச்சல், அசெளகரியம் போன்றவற்றை உணர்ந்தால், அது கொலஸ்ட்ராலின் அறிகுறியாக இருக்கலாம்.
நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது, அது படிப்படியாக கண்களின் மேற்பரப்பில் படியத் தொடங்கும். அத்தகைய சூழ்நிலையில், எரிச்சல் மற்றும் அரிப்பு போன்ற உணர்வுகள் ஏற்படும். நரம்புகளில் கொலஸ்ட்ரால் படிவதால், கண்களின் மேற்பரப்பில் அதிக வறட்சி காணப்படுகிறது. கண்களில் பலவீனம் ஏற்படத் தொடங்கும் நிலையில், வீக்கம், அரிப்பு, கண்களில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கக் கூடும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது, கண்களைச் சுற்றி சிறுசிறு கட்டிகள் உருவாகும். இந்த கட்டி உண்மையில் கொழுப்பு ஆகும். இந்த சூழ்நிலையில், கண்களில் தெளிவின்மை ஏற்படும். உடலில் அதிகரித்து வரும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். உங்கள் உணவில் புரதம் நிறைந்த பொருட்களை தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் கண்களில் கொழுப்பின் அறிகுறிகளைக் கண்டால் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.