fbpx

”ஆத்தி பார்க்கவே ரண கொடூரமா இருக்கே”..!! தெரிஞ்சு கூட இந்த மீனை தொட்றாதீங்க..!! உயிருக்கே ஆபத்து..!!

உலகில் பல விஷ உயிரினங்கள் உள்ளன. இவற்றில் பலவும் ஒரு நொடியில் உங்களைக் கொல்லும் அளவுக்கு கொடிய விஷம் கொண்ட விலங்குகளாக உள்ளன. அந்த வகையில், ஸ்டோன்ஃபிஷ் எனப்படும் கல்மீன் குறித்து கேள்விப்பட்டதுண்டா..? இந்த விஷ மீன்கள், வெப்பமண்டல பசிபிக் கடல் பகுதிகள் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் காணப்படுகின்றன.

இந்த கல்மீன் பார்ப்பதற்கு ஒரு கல்லை போலவே இருக்கும். பெரும்பாலான மக்கள் இந்த மீனை அடையாளம் காண முடியாததால், அவற்றிற்கு இரையாகி விடுகின்றனர். இந்த மீன் மீது யாராவது தவறுதலாக கால் வைத்து விட்டால், அது விஷத்தை உமிழும். மிகவும் ஆபத்தான இந்த விஷம், மனிதனின் காலில் விழுந்தால், கால் துண்டிக்கப்பட வேண்டியிருக்கும். மேலும், கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால் மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானது.

இந்த மீன் வெறும் 0.5 விநாடிகள் வேகத்தில் அதன் விஷத்தை வெளியிடும் என்று கூறப்படுகிறது. அதாவது கண் இமைக்கும் நேரத்தில் இது தனது வேலையை செய்து முடித்துவிடும். இந்த மீனின் விஷம் ஒரு துளி தண்ணீரில் கலந்தால், நகரத்தின் ஒவ்வொரு நபரும் இறக்க நேரிடும். மனிதனின் உடல் மீது இந்த மீனின் விஷம் பட்டால், அவருக்கு மரணம் நிச்சயம்.

எனவே, உலகில் காணப்படும் அனைத்து மீன்களிலிருந்தும் முற்றிலும் மாறுபட்டதாக இந்த மீன் கருதப்படுகிறது. பார்ப்பதற்கு இந்த ஒரு கல்லை போல் தெரிந்தாலும், இவற்றின் உடல் பகுதி மிகவும் மென்மையாக இருக்கின்றது. எனினும் அதன் மேல் ஓடு கல்லை போல கடினமானது.

Read More : அனைத்து விமானங்களும் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு இதுதான் காரணமா..? பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்..!!

English Summary

The fish is said to release its venom in just 0.5 seconds.

Chella

Next Post

ஆபீஸ்ல உட்கார்ந்துக்கிட்டே வேலை செய்றீங்களா? உடல் எடை அதிகரிக்காமல் இருக்க இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க..

Tue Oct 15 , 2024
Do you work sitting in the office? Try these tips to avoid gaining weight.

You May Like