fbpx

இந்த மாதம் பணமழை கொட்ட போகும் ராசிக்காரர்கள்.. வாயடைத்து நிற்கப் போகும் அதிர்ஷ்ட ராசிகள் யார்.!

இந்து மத ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு ராசியினருக்கும் ஒரு இஷ்ட தெய்வம் இருக்கும். இந்த இஷ்ட தெய்வம் அந்த ராசியினருக்கு நன்மைகளை ஏற்படுத்தும். ராசிபலன் என்பது நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் அடிப்படையில் கணித்து கூறப்படும் நம்பிக்கையாக இருந்து வருகிறது. மேலும் ராசிகளுக்கு துணையாக இருக்கும் நவகிரகங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இடம் மாறும்.

இவ்வாறு இடம் மாறுவதை அடிப்படையாக வைத்து 12 ராசிக்காரர்களுக்கும் காலநிலை மாற்றம் நடைபெறும். இதன்படி இந்த மாதம் செல்வங்களின் தெய்வமான லட்சுமி தேவியின் பார்வை எந்த ராசியில் விழுகிறது. எந்த ராசியினருக்கு பணமழை கொட்டப் போகிறது என்பதை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

துலாம் : இதுவரை பல கஷ்டங்களை அனுபவித்து வந்த துலாம் ராசியினருக்கு இந்த மாதத்தில் இருந்து லட்சுமி தேவியின் பார்வை நேரடியாக விழுவதால் அதிர்ஷ்ட மழை கொட்டப் போகிறது. மேலும் தொழில் மற்றும் வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்ந்து பண வரவு அதிகரிக்கும்.

ரிஷபம் : சவால்கள் நிறைந்த ரிஷப ராசிக்காரர்கள் இதுவரை எதிர் கொண்ட பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். கடன் பிரச்சனை, அடிக்கடி நோய் நொடியில் ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் விலகும்.

சிம்மம் : சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசியினர் இந்த மாதம் முழுவதும் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். லட்சுமியின் பார்வை நேரடியாக விழுவதால் பல கஷ்டங்களை சந்தித்தாலும் பணவரவு அதிகரிக்கும்.

தனுசு : வியாழனை அதிபதியாக கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு தை மாதம் பூர்வீக சொத்துக்களால் இதுவரை இருந்து வந்த பிரச்சனை தீரும். நிலம் வீடு வாங்கும் யோகம் ஏற்படும்.

கும்பம் : சனிபகவானின் பார்வை ஒரு ராசியினர் மீது பட்டால் தொடர்ந்து தொல்லைகள் ஏற்படும் என்று பலரும் கருதி வருகிறோம். ஆனால் அதில் உண்மை இல்லை. சனி பகவானையே அதிபதியாகக் கொண்ட கும்பம் ராசியினருக்கு இந்த மாதம் பணவரவு அதிகரித்து வேலை மற்றும் தொழிலில் லாபம் ஏற்படும். மேலே குறிப்பிட்ட 5 ராசியினருக்கு லட்சுமியின் பார்வை நேரடியாக விழுவதால் அதிர்ஷ்ட மழை கொட்டும்.

Rupa

Next Post

உடலில் இந்த சத்து அதிகமானால் இதயநோய் ஏற்படுமா.? மருத்துவர்களின் எச்சரிக்கை.!

Tue Feb 6 , 2024
நாம் உண்ணும் பல்வேறு உணவுகளும் ஊட்டச்சத்து அதிகமாக இருக்க வேண்டும் என்று நினைத்துதான் உணவுகளை உண்டு வருகிறோம். ஆனால் நம் உடலில் ஒரு சில ஊட்டச்சத்துக்கள் அதிகப்படியானால் அதுவும் நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். நம் உடலில் பல்வேறு நோய்களுக்கு தீர்வாக இருக்கும் புரோட்டின்  அளவுக்கு அதிகமானால் உடலில் நோய்களை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர். புரோட்டீன் உடலுக்கு மிகவும் அவசியமான சத்துக்களில் ஒன்றாகும். புரோட்டின் […]

You May Like