fbpx

கேரளா ஸ்டைலில் சுவைமிகுந்த இறால் தொக்கு செய்வது எப்படி.?!

கேரளா சமையலின் முறைப்படி மணமணக்கும் இறால் மசாலா செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம் – 100 கிராம், தக்காளி – 100 கிராம், கருவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு, கரம் மசாலா – ஒரு தேக்கரண்டி, இஞ்சி, பூண்டு பேஸ்ட் – ஒரு தேக்கரண்டி, எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன், சோம்பு – 1/4 டீஸ்பூன், பச்சை மிளகாய் -3, உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி அளவு

முதலில் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு சேர்த்து பொரிந்து வந்ததும் பச்சை மிளகாய், வெங்காயம், கருவேப்பிலை போன்றவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கி சிறிது நேரம் கழித்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு போன்றவற்றை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

கொதித்து எண்ணெய் பிரிந்து வந்த பின்பு அதில் இறால் சேர்த்து சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும். இறாலை அதிக நேரம் வேக விடக்கூடாது. இறால் வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லி தலையை தூவி மூடி வைத்து பரிமாறினால் சுவையான இறால் தொக்கு ரெடி.

Baskar

Next Post

வாழ்வில் சீக்கிரம் முன்னேற வேண்டுமா.? இந்த விஷயங்களை எல்லாம் பண்ணுங்க போதும்.!

Tue Jan 9 , 2024
வாழ்வில் முன்னேறுவதற்கு பல வகையான முயற்சிகளை செய்திருந்தாலும் தொடர்ந்து சறுக்கல்கலையே சந்தித்து இருப்பீர்கள். இதனை நம்மில் இருக்கும் ஒரு சில குணநலன்களை மாற்றிக் கொள்வதன் மூலம் வாழ்வில் மேன்மேலும் முன்னேறலாம் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அவைகள் 1. தன்னைப் பற்றியே அடிக்கடி பெருமையாக பேசிக் கொள்வது,2. ஒருவர் கஷ்டத்தில் இருக்கும் போது அவர்களைப் பார்த்து சிரிப்பது,3. மற்றவர்களை பார்த்து பொறாமைப் படுவது,4. பொய் பேசுவது5. அடிக்கடி சண்டை சச்சரவு செய்வது6. […]

You May Like