fbpx

வீடே மணக்கும் சுவையான வடை குழம்பு எப்படி செய்யலாம்.!? வாங்க பார்க்கலாம்.!?

தற்போதுள்ள பிசியான காலகட்டத்தில் ஈசியாகவும், வேகமாகவும் சமைப்பது எப்படி என்பது குறித்து பலரும் தேடி வருகின்றனர். அந்த வகையில் ஈசியாகவும், சுவையாகவும் வடை குழம்பு எப்படி செய்யலாம் என்பதை குறித்து பார்க்கலாம். இந்த குழம்பின் சுவை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை கண்டிப்பாக பிடிக்கும்.

தேவையான பொருட்கள்: கடலை பருப்பு – 250கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 4, தக்காளி – 3, பச்சை மிளகாய் – 2, சீரகம், கடுகு, கருவேப்பிலை, உப்பு, எண்ணெய், சோம்பு – தேவையான அளவு, புளி – எழுமிச்சை பழம் அளவு, மிளகாய் தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – சிறிதளவு

செய்முறை: முதலில் கடலைப்பருப்பை சுடு தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஊற வைத்த பருப்பை தண்ணீரை வடிகட்டி ஒரு அளவிற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அரைத்து வைத்த பருப்பை ஒரு பாத்திரத்தில் மாற்றி வெங்காயம், பச்சை மிளகாய் சீரகம், சோம்பு, உப்பு, கருவேப்பிலை சேர்த்து பிசைந்து வைத்து கொள்ள வேண்டும். பின்பு இதை வடையாக தட்டி பொரித்து எடுக்க வேண்டும்.

பின்னர் மற்றுமொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கருவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். பின்பு வெங்காயம் போட்டு நன்றாக வதங்கிய பின்பு தக்காளி, பச்சை மிளகாய், சேர்த்து வதக்க வேண்டும். நன்றாக வதங்கிய பின்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது புளியை கரைத்து ஊற்ற வேண்டும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கொதித்து எண்ணெய் பிரிந்து வரும். இதன் பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, பொறித்து வைத்த வடையை குழம்பில் போட்டு மூடி வைக்க வேண்டும். 10 நிமிடங்களுக்கு பின்பு எடுத்து பரிமாறினால் சுவையான சூடான வடை குழம்பு தயார்.

Rupa

Next Post

வாகன ஓட்டிகளே ஜாக்கிரதை..!! தொடர் பனிமூட்டம்..!! 6 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்..!!

Sat Jan 27 , 2024
டெல்லியில் கடந்த சில நாட்களாக வெப்ப நிலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. சண்டிகர், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் சில பகுதிகளிலும் குளிர் அலையால் பனிமூட்டமான நிலை நீடித்தது. ஹரியானாவின் ஹெசாரில் குறைந்தபட்ச வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸாகவும், உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் 1.5 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 நாட்களுக்கு குளிர் அலை தொடரும் என எச்சரித்திருக்கிறது. […]

You May Like