இந்திய ராணுவத்திற்கு ஆயுதம் தயாரிக்கும் மத்திய அரசின் நிறுவனமானப் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்டில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
பணியின் முழு விவரங்கள்…
பணியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
MT(Electronics) | 12 |
MT (Mechanical ) | 10 |
MT( Electrical) | 03 |
MT (Metallurgy) | 02 |
MT(Computer Science) | 02 |
MT(Optics) | 01 |
MT(Business Development) | 01 |
MT( Finance) | 03 |
MT(Human Resources) | 03 |
மொத்தம் | 37 |
சம்பளம் விவரம்…
அறிவிப்பில் வெளியிட்ட தகவலின் படி இப்பணிக்கு ரூ.40,000 – 1,40,000/- வரை சம்பளம் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: அதிகபட்ச வயது வரம்பு 55 ஆக நிர்ணயம்.
பணி | கல்வித்தகுதி |
MT (Electronics) | எலெக்ரானிக் இன்ஜீனியரிங்கில் இளங்கலை பட்டப்படிப்பு |
MT (Mechanical) | மெக்கானிகல் இன்ஜீனியரிங்கில் இளங்கலை பட்டப்படிப்பு |
MT(Electrical) | எலெக்டிரிக்கல் இன்ஜீனியரிங்கில் இளங்கலை பட்டப்படிப்பு |
MT (Metallurgy) | மேடாலூர்ஜி இன்ஜீனியரிங்கில் இளங்கலை பட்டப்படிப்பு |
MT (Computer Science) | கம்ப்யூட்டர் இன்ஜீனியரிங்கில் இளங்கலை பட்டப்படிப்பு |
MT (Optics) | இயற்பியல் பிரிவில் முதுகலைப் பட்டப்படிப்பு |
MT (Business Development) | மேற்குறிப்பிட்ட அல்லது சம்பந்தப்பட்ட பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் எம்.பி.ஏ டிகிரி |
MT (Finance) | சிஏ தேர்ச்சி அல்லது எம்.பி.ஏ. |
MT (Human Resources) | ஏச் ஆர் பிரிவில் எம்.பி.ஏ அல்லது முதுகலைப் பட்டம் |
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்குக் கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
பொதுப் பிரிவினர் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
SC / ST/ PwBD / Ex-Servicemen / Internal Employee கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதார்கள் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் அங்கீகரிக்கப்பட்ட இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முகவரி – https://www.i-register.co.in/akshayreg22/home.aspx
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 28.11.2022