fbpx

மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பளம்..!! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

காலியாக உள்ள 11 மாவட்ட கல்வி அலுவலர் (District Educational Officer (Group – I C Services) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. வரும் ஜனவரி 13ஆம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பளம்..!! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

TNPSC District Educational Officer

காலியிடங்கள்: 11

இதில் பொதுவகை பிரிவினருக்கு 9 இடங்களும், அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் பிரிவில் இருந்து 2 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

வயது வரம்பு: இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொது பிரிவினர் 1.07.2022 அன்று 32 வயதுக்குள் கீழ் வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்), ஆதி திராவிடர், ஆதி திராவிட அருந்ததியர், பழங்குடியினர் ஆகிய பிரிவினர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

ஆசிரியர் வகை (Teacher Category) விண்ணப்பதாரர்கள் 1.07.2022 அன்று 42 வயதுக்குள் கீழ் வேண்டும்.

TNPSC District Educational Officer கல்வித் தகுதி: Mathematics, Physics, Chemistry, Botany, Zoology, Economics, Geography, History, Commerce, Tamil and English ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். (மற்றும்) B.T / B.Ed பட்டம் பெற்றிருக்க வேண்டும் (மற்றும்) விண்ணப்பத்தாரரகள் தங்கள் இடைநிலைக் கல்வி/ PSU/HSC இவைகளில் ஏதேனும் ஒன்றில் தமிழை ஒரு பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNPSC District Educational Officer சம்பளம் விவரம்: ரூ. 56.900 முதல் ரூ.2,09,200 வரை (நிலை 22)

தேர்வு திட்டம்:

இப்பதவிக்கு முதல் நிலை தேர்வு ஏப்ரல் 9ஆம் தேதி தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட 15 இடங்களில் நடைபெற இருக்கிறது. முதல் நிலை தேர்வில் தமிழ் மொழி பிரிவில் 40 மதிப்பெண்கள் தகுதி பெற்றால் மட்டுமே விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும். முதன்மை தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி…?

இந்த மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் TNPSC தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Chella

Next Post

சமக்ரா சிக்ஷா திட்டம்.‌‌..! ‌5,646 பள்ளிகளுக்கு அனுமதி.‌‌..! மத்திய அரசு தகவல்..‌.! ‌‌

Thu Dec 15 , 2022
மாநிலங்கள் மற்றும் உள்ளூர் சமூக அமைப்புகளின் கூட்டு செயல்பாட்டுடன் கல்வியில் பாலின சமத்துவத்தை அடைவதற்கான நடைமுறைகளை இது பரிந்துரைக்கிறது. சமக்ரா சிக்ஷா திட்டத்தின் 2-வது கட்டத்தின் கீழ், சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண் குழந்தைகளுக்கு தரமான கல்வி அளிப்பதற்கான நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.கஸ்தூரிபா காந்தி மழலையர் பள்ளிகள் மூலமாக பள்ளிக் கல்வியில் பாலின இடைவெளியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள், மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொத்தம் 5,646 கஸ்தூரிபா காந்தி மழலையர் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு 6,69,000 […]
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை..!! இன்றே கடைசி நாள்..!! உடனே முந்துங்கள்..!!

You May Like