மத்திய அரசின் இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 14 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பதவியின் பெயர் | காலியிடங்கள் | வயது | சம்பளம் |
Deputy Director (Finance & Accounts) | 2 | அதிகபட்சம் 40 வயது | ரூ.67,700 – 2,08,700 |
EDP Assistant | 1 | அதிகபட்சம் 35 வயது | ரூ.35,400 – 1,12,400 |
Junior Hydrographic Surveyor (JHS) | 3 | அதிகபட்சம் 30 வயது | ரூ. 3,5400 – 1,12,400 |
Stenographer – D | 4 | அதிகபட்சம் 27 வயது | ரூ.25,500 – 81,100 |
Lower Division Clerk (LDC) | 4 | அதிகபட்சம் 27 வயது | ரூ.19,900 – 63,200 |
கல்வித்தகுதி:
அந்தந்த பிரிவுகளில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Stenographer – D மற்றும் Lower Division Clerk பணிகளுக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், டைபிங் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்களைக் கணினி வழி எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு https://iwai.nic.in/ என்ற ஆன்லைன் முகவரி மூலம் மட்டும் தான் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணமாக SC / ST, PWD and EWS பிரிவினர் ரூ.200/- மற்றும் இதர பிரிவினர் ரூ.500/- கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: https://cdn.digialm.com//EForms
ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் நாள் 19.11.2022
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் 17.12.2022