இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் மூலமாக 7.1% வரை வட்டி கிடைக்கிறது. இந்த திட்டம் எதிர்காலத்தில் பயன்தர உருவாக்கப்பட்ட திட்டமாகும். மேலும், PPF கணக்குகளுக்கு முதிர்ச்சி காலம் 15 ஆண்டுகளாக இருக்கிறது. இதில் 500 முதல் 1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் கணக்கு தொடங்கி 3 முதல் 6 வருடங்கள் வரை கடன் பெறும் வசதி உண்டு. அதேபோல் முதிர்ச்சி காலம் முடிந்து பின் 5 வருடங்கள் கணக்கை நீட்டித்துக் கொள்ளலாம்.
இந்த திட்டத்தை தொடங்க எஸ்.பி.ஐ. வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து இருந்தால் இபிஎப் கணக்கு தொடங்குவது ஈசியாகும். அதேபோல் பிபிஎப் கணக்கு தொடங்கி 5 ஆண்டுகள் வரை பணத்தை எடுக்க முடியாது. இந்த கணக்கு தொடங்கி 15 ஆண்டுகள் முடிவதற்கு முன்னால் கணக்கில் இருந்து பணத்தை எடுத்தால் ஒரு சதவீதம் தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படும். இதனை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தொடங்கிக் கொள்ளலாம். 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் இந்த கணக்கை தொடங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தை தொடங்க ஆதார் அட்டை, வீட்டு முகவரி சான்றிதழ், புகைப்படம் ஆகிய ஆவணங்கள் மூலம் எஸ்பிஐ இணையதளம் மூலம் ஆன்லைனில் தொடங்கலாம்.