fbpx

ஸ்கூட்டர்களில் பிரேக் பக்கத்துல ஒரு லிவர் இருக்கும்… இந்த சின்ன கம்பி இவ்ளோ பெரிய விஷயத்தை செய்யுமா?

நாம் எல்லோரும் நாள் தோறும் ஏதோ ஒரு வாகனத்தை ஓட்டிக்கொண்டே தான் இருக்கிறோம். நாம் அன்றாடம் சாலையில் பார்க்கும் வாகனங்களில் ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒவ்வொரு அம்சங்கள் இருக்கும், ஒவ்வொரு வாகனத்தின் திறனும் மேம்படும். நாம் நமது தேவை மற்றும் பொருளாதார சூழ்நிலைகளை மனிதில் வைத்து நமக்கு தேவையான வாகனம் எது என்பத்தைத்தேர்வு செய்து வாங்குகிறோம்.

பொதுவாக நாம் வாங்கும் வாகனத்தில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் இருக்கிறது. அதை எப்படி எப்படிப் பயன்படுத்த வேண்டும், எந்தெந்த சூழ்நிலைகளில் எல்லாம் இது உதவும் என்பதை நாம் கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்ள விரும்புவோம்.

நம் வாகனத்தில் பெரும்பாலான அம்சங்களை நாம் தெரிந்து வைத்துக்கொண்டிருப்போம். ஆனால் பலருக்கு அவர்கள் பயன்படுத்தும் வாகனத்தில் உள்ள ஒரு தனித்துவமான அம்சம் அல்லது பெரிய அளவில் தெரியவராத அம்சங்கள் பற்றித் தெரியாமல் இருக்கும். எல்லா வாகனங்களில் பொதுவாக இருக்கும் அம்சங்களைப் பற்றி எல்லாம் நாம் நன்கு அறிந்திருப்போம் அதை நாம் அன்றாடம் வாகனம் ஓட்டும் விஷயங்களில் பயன்படுத்துவோம்

ஆனால் சில வாகனங்களில் மட்டும் இருக்கும் அம்சங்கள் பற்றி பெரிய அளவில் தெரிந்து வைத்திருக்க மாட்டோம். அப்படியான ஒரு அம்சத்தைப் பற்றித் தான் இந்த பதிவில் நாம் காணப்போகிறோம். நம்மில் பலர் தினமும ஸ்கூட்டரை பயன்படுத்துவோம். இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் மிக அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. இந்த ஸ்கூட்டரில் உள்ள ஒரு முக்கியமான அம்சம் என்னவென்று அதைப் பயன்படுத்தும் பலருக்குத் தெரியாது. ஹோண்டா உள்ளிட்ட குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டும் தான் தங்கள் ஸ்கூட்டர்களில் இப்படியான ஒரு அம்சத்தை வழங்குகின்றனர். இந்த நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் ஸ்கூட்டரில் இடது பக்க பிரேக்கிற்கு அருகே சிறியதாக ஒரு லிவர் ஒன்றை கொடுத்திருப்பார்கள். இது என்ன? எதற்காக இதை பயன்படுத்துவது? எப்படிப் பயன்படுத்துவது என்ற தகவல்கள் எல்லாம் பலருக்கும் தெரியாது.

சிலர் இதை ஸ்கூட்டரின் சோக் என நினைத்துக்கொண்டிருக்கின்றனர். நீண்ட நாட்களாக ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யாமல் வைத்திருந்தால் இதைப் பிடித்தால் இது பெட்ரோலை அதிகமாக இன்ஜினிற்குள் அனுப்பும் என நம்பி வருகின்றனர்.

ஆனால் அது உண்மை அல்ல இந்த அம்சத்திற்குப் பெயர் பிரேக் லாக்கர் இது பொதுவாக ஸ்கூட்டரின் இடது பக்க பிரேக் அருகே தான் கொடுக்கப்பட்டிருக்கும். இதை நாம் ஸ்கூட்டரை ஒரு இடத்தில் பார்க் செய்து விட்டு ஸ்கூட்டரின் வீல் நகராமால் இருக்க வேண்டும் என்றால் ஸ்கூட்டரின் பின் பக்க பிரேக்கை பிடித்துவிட்டு இந்த லாக்கரை போட்டால் பின்பக்க பிரேக் ரிலீஸ் ஆகாமல் ஸ்கூட்டர் அப்படியே நிற்கும் அதற்காகத் தான் இந்த பிரேக் லாக்கர் வழங்கப்படுகிறது. இதன் பெயரில் உள்ளதைப் போல பிரேக்கை லாக் செய்யத்தான் இது பயன்படுகிறது

உதாரணமாக நாம் இப்பொழுது சமமாக இல்லாத ஒரு சருக்கலான இடத்தில் ஸ்கூட்டரை நிறுத்துகிறோம் என வைத்துக்கொள்வோம். அப்பொழுது ஸ்கூட்டரின் எடை காரணமாக நாம் என்ன தான் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினாலும் ஸ்கூட்டர் முன்னோக்கியோ பின் நோக்கியோ இழுத்துக்கொண்டு செல்லும். இப்படியான சூழ்நிலைகளில் பலர் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு அதன் பின் வீல் நகராதபடி ஒரு கல்லை வைத்துச் செல்வார்கள். ஆனால் இந்த அம்சம் இருக்கும் ஸ்கூட்டரில் அப்படி நிறுத்த வேண்டிய சூழ்நிலை இல்லை.

சற்று இறக்கமான இடத்தில் இந்த ஸ்கூட்டரை நிறுத்தும் போது பின்பக்க பிரேக்கை பிடித்துவிட்டு இந்த பிரேக் லாக்கரை வைத்து லாக் செய்துவிட்டால் பின்பக்க பிரேக் நாம் கையை எடுத்தாலும் ரிலீஸ் ஆகாமல் இருக்கும். அதனால் நாம் இந்த இடத்தில் பைக்கை நிறுத்தினாலும் அது முன் பின் நகராமல் அதே இடத்தில் அப்படியே இருக்கும். இதை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றால் மீண்டும் பின்பிரேக்கை லேசாகப் பிடித்துவிட்டால் இந்த பிரேக் லாக்கர் ரிலீஸ் ஆகி பிரேக்கும் ரிலீஸ் ஆகும்.


Next Post

இந்த காயின் ஜூஸ் உங்க கல்லீரல் மற்றும் சிறுநீரகத்திற்கு ஆபத்து.. எந்த காய்  தெரியுமா?

Thu Sep 29 , 2022
பீட்ரூட் ஜூஸ் வைட்டமின்கள், இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலத்தின் சிறந்த மூலமாகும், இது இரத்தத்தில் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கிறது, இரத்த சிவப்பணு உற்பத்தியை மேம்படுத்துகிறது, ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது மற்றும் உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜன் செல்வதை அதிகரிக்கிறது. பீட்ரூட் ஜூஸ் ஆரோக்கியமானதாக இருந்தாலும் அதனை அதிகமாக உட்கொள்வது ஆபத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மைதான், அதிகமாக பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் பல பக்க விளைவுகள் ஏற்படும் ஆபத்துள்ளது. இந்த பதிவில் […]

You May Like