fbpx

’செம ஜாலி’..!! வாட்ஸ் அப் செயலியில் புதிய அப்டேட்..!! உங்களால் இந்த வசதியை பயன்படுத்த முடிகிறதா..?

உலகின் தவிர்க்க முடியாத தகவல் தொடர்பு செயலியாகிவிட்டது வாட்ஸ்அப். தனது பயனர்களை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள மெட்டா நிறுவனம் அடிக்கடி மேம்பட்ட, புதிய, நவீன தொழில்நுட்ப அம்சங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

அந்த வகையில், வாட்ஸ் மற்றுமொரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சம் மிகவும் தனிப்பட்ட விருப்பங்களை வெளிப்படுத்தும் வகையில் இருப்பதால் பயனர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த புதிய அம்சம் தான் ‘அவதார் ஸ்டிக்கர்ஸ்’. இந்த புதிய அவதார் ஸ்டிக்கர்ஸ் மூலம் பயனர்கள தங்கள் உணர்வுகளை மிகத்துல்லியமாக வெளிப்படுத்தி சாட் செய்ய முடியும் என கூறப்படுகிறது. வாட்ஸ்அப்-பில் இனி பயனர்களை தங்கள் சொந்த உருவங்களை ஸ்டிக்கர்களாக உருவாக்கி பயன்படுத்திக் கொள்ள முடியும்.

’செம ஜாலி’..!! வாட்ஸ் அப் செயலியில் புதிய அப்டேட்..!! உங்களால் இந்த வசதியை பயன்படுத்த முடிகிறதா..?

மேலும், இந்த ஸ்டிக்கர்களை தங்கள் பெர்சனல் பயன்பாட்டிற்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த புதிய வசதி மூலம் நாம் உருவாக்கும் நம் சொந்த உருவங்களை கொண்ட அவதார் ஸ்டிக்கர்களில் லைட்டிங், ஷேடிங், ஹேர் ஸ்டைல், தோல் நிறத்தை மாற்றுவது, கண்கள், மூக்கு, காது, வாய் என்று ஒவ்வொன்றையும் உங்களைப் போல நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். இந்த அவதார் ஸ்டிக்கர்கள் ஸ்னாப் சாட்டின் பிட்மோஜி மற்றும் ஆப்பிளின் மெமோஜி போன்றே உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும். இந்த அம்சத்தை நீங்களும் உருவாக்கி, பயன்படுத்த வேண்டுமா? எப்படி என்று பார்க்கலாம்…

’செம ஜாலி’..!! வாட்ஸ் அப் செயலியில் புதிய அப்டேட்..!! உங்களால் இந்த வசதியை பயன்படுத்த முடிகிறதா..?

அவதார் அம்சத்தை பெறுவது எப்படி..?

  • வாட்ஸ்அப் அவதார் ஸ்டிக்கர்களை உருவாக்க Settings skin tone பகுதிக்குச் சென்று Avatar  என்பதைத் தேடவும். தொடர்ந்து Avatar  > create your avatar என்பதைத் தட்டி, உருவாக்குவதற்கான படிகளைப் பின்பற்றவும்.
  • பின்னர் ஸ்கின் டோன், சிகை அலங்காரம், மூக்கு போன்ற பல்வேறு அம்சங்களை பயன்படுத்தி உங்களுக்கான பிரத்யேக அவதார் ஸ்டிக்கர்களை உருவாக்குங்கள்.
  • இறுதியில் “Done” என்பதை கிளிக் செய்யவும். உங்கள் அவதார் ஸ்டிக்கரை சேமித்தவுடன் வாட்ஸ்அப் தானாகவே புதிய ஸ்டிக்கர் பேக்கை உருவாக்கும்.
  • அவதார்களை வாட்ஸ் அப்பில் ப்ரொபைல் படமாகவும் பயன்படுத்தலாம் அல்லது ஸ்டிக்கர் பேக்கில் சேமித்து வைத்துக் கொண்டு அதில் இருந்து தேவைக்கேற்ப தேர்ந்தெடுத்து சாட்லிஸ்டில்  உள்ளவர்களுக்கு அனுப்பலாம்.
  • உங்கள் வாட்ஸ்அப் ஸ்டோரிஸ்-களிலும் அவதார் ஸ்டிக்கர்களை பதிவிடலாம். இப்போது நீங்கள் உருவாக்கிய அவதார் ஸ்டிக்கர்களை புரொஃபைல் பிக்சராக மாற்றுவது எப்படி என்பதை பார்க்கலாம்..
  • Settings என்பதைத் தட்டி, உங்கள் ப்ரொஃபைல் பிக்சர் புகைப்படத்தைத் தட்டவும். படத்தை மாற்ற திரையில் பென்சில் விருப்பத்தைக் தேர்வு செய்து, உங்கள் டிஜிட்டல் அவதாரை ப்ரொஃபைல் படமாக வைக்க Use Avatar என கிளிக் செய்யவும். உங்கள் அவதார் ஸ்டிக்கர் புரொஃபைல் ரெடி.
  • அடுத்து உங்கள் அவதார் ஸ்டிக்கரை வாட்ஸ் அப் சாட்டில் அனுப்புவது எப்படி என்பதை பார்க்கலாம். வாட்ஸ்அப் சாட்டை திறந்து Stickers விருப்பத்திற்குச் செல்லவும். ஐபோன்களில், ஸ்டிக்கர் சாய்ஸ், நீங்கள் செய்தியை உள்ளீடு செய்யும் சாட் பாக்சில் இருக்கும்.
  • ஆண்ட்ராய்டு பயனர்கள் சாட் பாக்சில் உள்ள எமோஜி சின்னத்தைத் தட்டுவதன் மூலம் ஸ்டிக்கர்களை பெறலாம். பின்னர் கீழே உள்ள GIF-க்கு அடுத்துள்ள ஸ்டிக்கர் விருப்பத்தை கிளிக் செய்து வாட்ஸ் அப் சாட்டில் உங்கள் அவதார் ஸ்டிக்கர்களை பதிவிடலாம்.

Chella

Next Post

சென்னை பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலை..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tue Dec 20 , 2022
சென்னை பல்கலைக்கழகத்தில் கிண்டி வளாகத்தில் வழங்கப்படுகிற B.Sc. (Blended) Program [Biology] துறையில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் முழு விவரங்கள்: பதவியின் பெயர்: கௌரவ விரிவுரையாளர் சம்பளம்: ரூ.20,000 கல்வித்தகுதி: Life Sciences / Biological Sciences / Zoology / Biology பாடத்தில் முதுகலைப்பட்டத்துடன் Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்களைக் கல்வி சான்றிதழ், கற்பித்தல் அனுபவம், வெளியீடுகள், மதிப்பீடுகள் மற்றும் […]
சென்னை பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலை..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!!

You May Like