பொதுவாக நம் வீட்டு பூஜை அறையில் பல கடவுள்களின் படத்தை வைத்து வழிபட்டு வருவோம். இவ்வாறு செய்யும்போது நமக்கு உடல் ஆரோக்கியமும், மன நிம்மதியும் வந்து சேரும். ஆனால் ஒரு சில கடவுளின் படங்களை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்ன காரணம் என்பதை குறித்து பார்க்கலாம்?
பெரும்பாலான சிவபக்தர்கள் சிவனின் படத்தை வீட்டில் வைத்து வழிபட்டு வருகின்றனர். ஆனால் இவ்வாறு சிவன் தனியாக இருக்கும் படத்தை வைக்காமல் சிவன், பார்வதி என்று தம்பதியாக இருக்கும் படத்தை வைத்து வழிபட்டு வந்தால் குடும்பத்திற்கு நன்மை ஏற்படும். சிவன் அதிக கோவம் கொண்ட கடவுள் என்பதால் சிவன் சிலையை வைத்து வழிபட்டு வரும் போது வீட்டில் சண்டை, சச்சரவுகள் ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவன் மற்றும் பார்வதி படத்தை ஒன்றாக வைக்கும் போது குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன், மனைவி ஒற்றுமை பெருகி செல்வ வளத்துடன் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். சிவனுக்கு உகந்த நாளான திங்கட்கிழமை அன்று தம்பதியர்களாக விரதம் இருந்து வேண்டி வந்தால் கேட்ட வரம் கிடைக்கும் என்பதை ஜோதிட சாஸ்திரத்தில் உள்ளது.
மேலும் பலரும் தற்போது ராமர் படத்தை வீட்டில் வைத்து வழிபட்டு வருகின்றனர். ராமர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அரச பதவியை துறந்து வனவாசம் மேற்கொண்டார். பின்பு நாடு திரும்பிய ராமருக்கும், சீதைக்கும் சச்சரவுகள் ஏற்பட்டு சீதை தனியாக வனவாசம் மேற்கொண்டார். இதனாலேயே ராமர் படத்தை வீட்டில் வைத்து வழிபட்டு வரும்போது வீட்டிலும் சண்டை சச்சரவுகள் ஏற்படும். இதற்கு மாற்றாக ராமர் மற்றும் சீதை இணைந்த படத்தை வைத்து வழிபாடு செய்யலாம்.